அண்மைய செய்திகள்…

October, 2018

 • 15 October

  வட்டி ஓர் வன்கொடுமை!

  இன்று மக்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பொருட்களின் மீதுள்ள ஆசையும் பணத்தின் மீதுள்ள ஆசையும் மேலோங்கி விட்டது. பொருட்களின் மீதுள்ள ஆசையினால் “தவணை முறை” என்ற பெயரில் வட்டிக்குப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த வட்டி எனும் நரகப் படுகுழி எவ்வளவு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் …

  Read More »
 • 10 October

  இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்!

  ஏக இறைவனின் திருப் பெயரால்… இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் …

  Read More »
 • 9 October

  யார் இவர்?

  அல்லாஹ்வின் திருப்பெயரால்… உலக மக்களின் 4ல் ஒருவர் இவரை தங்களின் உயிரின் மேலாக மதிக்கின்றனர். சுமார் 200 கோடி மக்கள் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும், இவரிடமே தீர்வை எதிர்பார்க்கின்றனர்….யார் இவர்? சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டின் மக்கா நகரில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் கருணை அவர்கள் மீது உண்டாகட்டும்) பிறந்தார்கள். அவர்கள் தமது 25ஆம் வயதில் வணிகராகவும், நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். …

  Read More »
 • 8 October

  TNTJ ரியாத் மாநகரில் நடத்தும் 86வது மெகா இரத்ததான முகாம்!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 86வது மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நாள் : 19-10-2018 வெள்ளிக்கிழமை. நேரம் : காலை 8:00 முதல் மாலை 5 மணி வரை. இடம் : கிங் பஃஹத் மருத்துவமனை. (KFMC) RIYADH | TNTJ …

  Read More »
 • 7 October

  TNTJ ரியாத் மண்டலம் நடத்தும் 85வது இரத்ததான முகாம்!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்- அஜீஸியா கிளை) சார்பாக வருகின்ற 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) 85வது இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 📆 நாள் : 12-10-2018 வெள்ளிக்கிழமை. 🕗 நேரம் : மதியம் 12:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை. 📍 இடம் : பவாரி மஸ்ஜித் பள்ளி வளாகம், …

  Read More »
 • 2 October

  இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்! மனிதர்களாக படைக்கப்பட்ட நாம் அனைவரும் மரணிக்க கூடியவர்களே! நாம் அனைவரும் மறுமை நாளில் நாம் இவ்வுலகத்தில் செய்து கொண்டிருப்பது பற்றி விசாரிக்கப்பட உள்ளோம் என்பது அனைத்து முஸ்லிம்களின் ஒருமித்த கருத்தாகும், அப்படி விசாரிக்கப்படும் பொழுது இறைவனால் பெரும் கோபத்திற்கு உரிய தடை செய்யப்பட்ட தீமைகள் பற்றி இந்த துண்டு பிராசுரத்தின் மூலம் காண்போம்! ஷிர்க் எனும் இணைவைத்தல்!‎ ‎’நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; …

  Read More »

August, 2018

 • 10 August

  TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 84வது மெகா இரத்ததான முகாம் (இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மற்றும் ஹஜ் பயனிகளுக்காகவும்)

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத்  மெடிக்கல் சிட்டி (KFMC)  மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காகவும் மற்றும் 72வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்) நடைபெற்றது. இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்கபணியுடனுன் மனித …

  Read More »
 • 10 August

  TNTJ Riyadh – 84th Mega Blood Donation Camp for Hajj pilgrims & eve of 72 Indian Independence day.

  Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 84th Blood Donation Camp in coordination with King Fahd Medical City (KFMC) for Hajj pilgrims & eve of 72 Indian Independence day. By the grace of almighty Allah, Riyadh Chapter of TNTJ organized Blood Donation Camp in co-ordination with King Fahd …

  Read More »
 • 9 August

  அரஃபா நோன்பு மற்றும் குர்பானியின் சட்டங்கள்!

  அன்புள்ள சகோதர, சகோதிரிகளே! இஸ்லாமிய மார்க்கம் நமக்கு பல்வேறு நன்மையான காரியங்களை கடமையாகவும், வலியுறுத்தியும் (சுன்னத்) கூறி அதில் ஏராளமான இம்மை, மறுமை நன்மைகளையும் அவற்றினுள் பொதிய செய்துள்ளது, அது போன்ற இம்மாதத்தில் நமக்கு நன்மைகளை பெற்றுத் தரும் இரு முக்கியமான காரியங்களை இந்த துண்டு பிரசுரத்தின் வாயிலாக காண்போம்! அரஃபா நாள் நோன்பு அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் …

  Read More »

July, 2018

 • 31 July

  இரத்ததான சேவையை பாராட்டி TNTJ ரியாத் மண்டலத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது!

  சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக கடந்த 15 ஆண்டுகளாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது. இந்த மனித நேய சேவையை பாராட்டி இன்று 2018 ஜூலை 31 ஆம் தேதி அன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் சார்பில்; …

  Read More »