இரத்ததான சேவையை பாராட்டி TNTJ ரியாத் மண்டலத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது!
சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக கடந்த 15 ஆண்டுகளாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது.
இந்த மனித நேய சேவையை பாராட்டி இன்று 2018 ஜூலை 31 ஆம் தேதி அன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் சார்பில்; கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் பிரதான ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற உலக இரத்த நன்கொடை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழச்சியின் பொழுது பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை டாக்டர்.இம்ரான் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரியாத் மண்டல நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.
இரத்த வங்கியின் சேர்மன் டாக்டர்.அம்மார் அல் சுஃஹைர் அவர்கள் கூறுகையில், “மறுமை நன்மையை மட்டும் நாடி செய்யப்படும் இது போன்ற மனித நேய பணி பாராட்டுக்குரியது” என்று தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
இதனைப் போன்று சவுதி அரேபியா சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனைச் சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் இதற்கு முன்பும் பெற்றுள்ளது.
மேலும் வருகின்ற 72வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும், இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று) ரியாத் மாநகரில் 84வது சிறப்பு மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.
—எல்லா புகழும் இறைவனுக்கே—