வட்டி என்ற பெரும்பாவம் ஓர் எச்சரிக்கை!
நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது. நமது அன்றாடப் பிரச்சினைகள், குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய தெளிவான ஒரு கண்ணோட்டத்தையும் இஸ்லாம் நமக்குத் தருகிறது.
இஸ்லாம் சொல்லும் பொருளா-தராக் கொள்கைகளில் நாம் சரியாகப் புரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம் தான் வட்டி தொடர்பான இஸ்லாமிய நிலைபாடு. நரகத்திற்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தரும் இந்த வட்டிக் கொடுமை
வட்டியை பற்றி இஸ்லாம் சொல்லும் கடுமையான எச்சரிக்கைகள்
வட்டியை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (3:131)
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள் (3:130,131)
வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (2:275)
வட்டி அழிக்கப்பட்டு, தர்மம் வளர்க்கப்படுகிறது
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (2:276)
அல்லாஹ் வட்டியை அழிக்-கிறான். தர்மங்களை வளர்க்கிறான் நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(2:276)
வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (2:279)
அவ்வாறு நீங்கள் செய்யா-விட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. (2:279)
வட்டிக்கு துணை நிற்பவர்கள் அனைவரும் பாவத்தில் சமமே
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் – 2995)
ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவரு-க்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.
பெரும்பாவங்களில் ஒன்று
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவி-களான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.( புகாரி – 6857)
ஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
எனவே இப்படிப்பட்ட வட்டி என்ற பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றுவானாக!
இந்த ஃபைலை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்.