வட்டி ஓர் வன்கொடுமை!

இன்று மக்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பொருட்களின் மீதுள்ள ஆசையும் பணத்தின் மீதுள்ள ஆசையும் மேலோங்கி விட்டது. பொருட்களின் மீதுள்ள ஆசையினால் “தவணை முறை” என்ற பெயரில் வட்டிக்குப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த வட்டி எனும் நரகப் படுகுழி எவ்வளவு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்னும் அவர் அனைவரும் (குற்றத்தில்) சம்மானவர்கள் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 3258)

ஒரு  பொருளின்  விலை  நூறு  ரூபாய்  என்றால்  அதைத்  தவணை  முறையில்  வாங்கும்போது அந்தப் பொருளுக்கு      வட்டியைப் போட்டு தருகின்றனர். இதனால் தவணை முறையில் வாங்கும்போது வட்டியைக் கொடுத்த குற்றத்திற்கு ஆளாகின்றோம்.

அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்:

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக்கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 2:275)

தவணை முறை என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து அவர்களை நரகத்தின் உறுப்பினர்களாக ஆக்க சில வியாபாரிகள் முனைகின்றனர். இதற்கு அதிகமாக விலை போகுபவர்கள் பெண்கள் தான். பெண்களே உஷார்! நீங்கள் நரகத்தின் உறுப்பினர்களாக ஆகும் நிலை வேண்டுமா?  பின்வரும்  பொன்மொழியை  சிந்தித்துப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதிக பொருட்கள்  உடையவன்  செல்வந்தன்  அல்லன்;  போதுமென்ற  மனம் படைத்தவனே செல்வந்தன். (நூல் : புகாரி  6446)

ஒருவர் இஸ்லாத்தில்  இணைந்து போதுமென்ற தன்மையும் கொடுக்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமாக்கி கொண்டால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 1746)

அடுத்து, பணம் தேவைப்பட்டவுடன் வீட்டிலுள்ள  நகை,  பொருட்களை அடையாளம் வைத்து வட்டிக்குப் பணம் வாங்குகின்றனர். இதுவும் மாபாதகச் செயல்தான். இதற்கு காரணம் அடைமானம் வைத்தால் அந்தப் பொருட்களை நாம் திருப்பிப் பெற்று விடலாம். அந்த பொருளை விற்றுவிட்டால் திரும்பப் பெற முடியாது என்ற அவநம்பிக்கை!

ஆனால் பெரும்பாலும் அடகு வைக்கும் நகைகள் மூழ்கிப் போய் இறுதியில் ஏலத்திற்கு வருகிறது. மேலும் திருப்பும் நகையைக் கூட, அதன் மதிப்பை விடக் கூடுதலாக வட்டி கட்டித் தான் திருப்புகின்றனர். உதாரணமாக 5,000 ரூபாய் மதிப்புள்ள நகையை அடகு வைத்து 3,000 ரூபாய் வாங்குபவர், இறுதி யில் வட்டி குட்டி போட்டு 6,000 அல்லது 7,000 ரூபாய் கொடுத்து திருப்புகின்றனர். இதற்குப் பதிலாக 5,000 ரூபாய்க்கு விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாய் இலாபம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

மேலும் பொருளையும் நகையையும் தந்த அல்லாஹ், ஹராமான முறையில் பணம் பெறுவதை தவிர்த்துக் கொண்டு ஹலாலான முறையில் விற்று பணத்தைப் பெற்றால் அதைவிடச் சிறந்ததைத் தருவான் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் சிறந்த முஃமின் என்பதைப் பின்வரும்  வசனம் எடுத்துக் காட்டும்!

யார் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன். (திருக்குர்ஆன்  65:3)

ஒரு முஃமின் என்பவர் தொழுகையையும் நோன்பையும் மட்டும் கடைப்பிடிப்பவர்  அல்லர். அல்லாஹ் தடை செய்த்தை தடுத்துக் கொண்டு மறுமை நாளின் தண்டனையை அஞ்சி வாழ்பவரே ஆவார்.

அவ்வாறல்லாமல், வட்டி எனும் பெரும்பாவத்தில் வீழ்பவர்கள் அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்வதற்கு சமமான குற்றத்தை சம்பாதிப்பவர்கள் ஆவர்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. (திருக்குர்ஆன்  2:278, 279)

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…