தவ்ஹீத் ஜமாஅத்தும் பித்ரா நிதியும்

ஃபித்ரா வழங்குவதற்காக திரட்டும் நிதியை தவ்ஹீத் ஜமாஅத் வேறு வகையில் மீதமானதொகையை ஜகாத் கணக்கில் சேர்த்து விட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இவ்வாறு செய்தால் ஃபித்ரா கொடுத்தவர்களுக்கு ஃபித்ராவின் நன்மை கிடைத்து விடுமா? என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

ஃபித்ரா தொகையை ஃபித்ராவுக்குத் தான் பயன் படுத்த வேண்டும். இதில் தவ்ஹீத் ஜமாஅத்துக்குமாற்றுக்கருத்து இல்லை. அது போல் குறிப்பிட்ட மார்க்கக் கடமை வகைக்காக திரட்டப்படும்நிதியை அந்தப் பணிக்குத் தான் செலவிட வேண்டும்.

இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்செய்து வரும் நடைமுறையிலும் மார்க்க அடிப்படையில் எந்தத் தவறும் கிடையாது. தவ்ஹீத்ஜமாஅத் 2004 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடித்து வரும் நடை முறை மார்க்கத்தின் வரம்புமீறப்படாத வகையிலும் ஏழைகளுக்கு பித்ராவின் பயன் முழுமையாகச் சென்றடையும்வகையிலும் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பித்ரா திரட்டுதலும் அதன் வினியோகமும்அமைந்துள்ளது. முழு விபரத்தையும் அறிந்து கொண்டால் இதில் மார்க்க வரம்பு சிறிதளவும்மீறப்படவில்லை என்பதை அறியலாம்.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமையைப் பொருத்த வரை உள்ளூரில் பித்ரா வசூலிப்பதில்லை. உள்ளூரில் அந்தந்த கிளைகள் தான் வசூலித்து விநியோகித்துக் கொள்வார்கள். மாநிலத்தலைமைக்கு நேரில் வந்து சில ஆயிரம் ரூபாய் அளவுக்கு சிலரால் வழங்கப்படும் பித்ரா மட்டுமேதலைமைக்கு உள்ளூரில் திரட்டப்படும் நிதியாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மூலம் கிளைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பித்ரா தொகை முழுவதும்வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்கள் மூலம் அனுப்படும் தொகை மட்டுமே.

வெளிநாடுகளில் வாழும் தவ்ஹீத் சகோதரர்கள் தங்கள் பித்ரா தொகையைப் பெற்றுக் கொள்ளும்நிலையில் ஏழைகள் இல்லை என்பதால் தங்கள் பித்ரா தொகையை என்ன செய்வது என்றுகேள்விகள் எழுப்பி வந்தனர். இந்தக் கேள்விகள் 1992 முதல் எழுப்பப்பட்டு வந்தது.

உங்கள் ஃபித்ரா தொகையைத் தாயகத்தில்  வழங்கினால் ஏழைகள் பயன்படுவார்கள் என்று நாம்கூறியதன் அடிப்படையில் சில சகோதரர்கள் என் பெயருக்கு பித்ரா தொகையை நான் மதுரையில்அப்போது அச்சகம் நடத்திக் கொண்டிருந்ததால் அனுப்பி வைத்தார்கள். அதை மதுரைசகோதரர்களிடம் ஒப்படைத்து மதுரையில் மட்டும் விநியோகம் செய்தோம். 1994 லும் இதுபோல்அனுப்பப்பட்டது. இந்தக் கால கட்டங்களில் ஒரு லட்சம் ரூபாய்க்குள் பித்ரா அனுப்பப்பட்டுவந்தது.

1995ல் தமுமுக ஆரம்பிக்கப்பட்ட போது அந்தக் கால கட்டத்தில் அமைப்பு ரீதியாக தவ்ஹீத்ஜமாஅத் உருவாக்கப்படாமல் இருந்ததால் தமுமுகவுக்கு அனுப்பி வைக்குமாறு நான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பித்ரா தொகையை தமுமுகவுக்கு அனுப்பினார்கள்.

அந்தக் காலகட்டத்தில் தமுமுகவிற்கு பொருளாதாரத் தேவை இருந்ததால் வளைகுடாவில்உள்ள சகோதரர்கள் ஒன்று கூடி ஒரு முடிவை அறிவித்தார்கள்.

அதாவது இந்தியாவில் அன்றைய நிலவரப்படி ஒரு நபருக்கு முப்பது ரூபாய் பித்ரா என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சவூதி, மற்றும் வளைகுடாவில் சவூதி உலமாக்கள் 10 ரியால் என்று நிர்ணயித்திருந்தனர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் தொண்ணூறு அல்லது நூறு ரூபாய்.

பணமதிப்பில் உள்ள இந்த வேறுபாட்டைக் கவனத்தில் கொண்டு நாமும் 10 ரியால் பித்ராதிரட்டுவோம். இந்தியக் கணக்கின் படி பித்ரா விநியோகம் செய்து விட்டு எஞ்சிய தொகையை தமுமுக வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்திக் கொள்வது என்று வளைகுடா தமுமுகவினர் முடிவுஎடுத்து அறிவித்தனர்.

ஏன் பித்ராவாக மூன்று திர்ஹத்தையே வாங்கலாமே? என்று நாம் கேட்டோம். வளைகுடாஅரசுகள் பத்து ரியால் அல்லது பத்து திர்ஹம் என்று நிர்ணயித்துள்ளதால் அதை விடக் குறவாகபித்ரா கொடுக்க மக்கள் விரும்பவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

அப்படியானால் இப்படிச் செய்வது தவறில்லை. ஆனால் பித்ரா வசூலிக்கும் படிவத்தில் இதைத்தெளிவாகக் குறிப்பிடுங்கள் என்று நாம் தெரிவித்தோம். அதாவது பித்ரா என்பது மூன்று திர்கம்தான். கூடுதல் தொகை இயக்கப் பணிகளுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டால் இதற்கு முழுமனதுடன் சம்மதிப்பவர்கள் தான் நம்மிடம் தருவார்கள். அவர்களின பித்ரா கடமையும்நிறைவேறி விடும். இயக்கத்துக்கான பணிக்கு உதவியாகவும் அமையும் என்றுஅறிவுறுத்தினோம்.

அதன்படி பத்து லட்சம் அவர்களிடமிருந்து வந்தால் நாலு லட்சம் பித்ராவாக விநியோகம்செய்யப்படும். ஆறு லட்சம் இயக்கத்துக்கு பயன்படுத்தப்படும். நாலு லட்சம் மட்டும் விநியோகிப்பதே அனைவரின் பிதராவுக்கும் போதுமான தொகையாகும்.

இந்த நிலையில் தான் தமுமுகவில் இருந்து தவ்ஹீத் சகோதரர்கள் மொத்தமாக வெளியேறிதவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்பட ஆரம்பித்தோம். தமுமுகவுக்கு அனுப்பி வந்த சகோதரர்களில்மிகப் பெரும்பாலோர் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பித்ராவை அனுப்பலானார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் விநியோகம் செய்யும் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்தது.

வளகுடாவில் இருந்து அனுப்பப்படும் தொகையில் இந்த்யாவில் தமிழகத்தில் உள்ள விலவாசிநிலவரப்படி பித்ரா கொடுத்தாலே அனைவரின் பித்ரா நிறைவேறி விடும் என்றாலும் ஏழைகள்அதிகமாக உள்ளதால் வருகின்ற அனைத்தையும் நாம் விநியோகம் செய்து விடுவோம். நிர்வாகப்பணிக்கு பயன்படுத்த வேண்டாம் என்பது தான் அந்த முடிவு.

உதாரணமாக இந்த ஆண்டு சுமார் அறுபது லட்சம் ரூபாய் வருகிறது என்றால் தலைக்கு பத்துதிர்கம் அல்லது ரியால் என்ற கணக்கில் தான் அவை திரட்டப்பட்டன. இந்த ஆண்டு தமிழகவிலைவாசி நிலவரப்படி ஒரு நபருக்கு நாற்பது ரூபாய் பித்ரா என்ற கணக்குப் படிஒவ்வொருவரும் பித்ராவை விட அறுபது ரூபாய்கள் கூடுதலாக வழங்கியுள்ளனர். அறுபதுலட்சம் ரூபாயில் இருபது லட்சம் ரூபாய்  பித்ரா வினியோகம் செய்தாலே அனைவரின் பித்ராவும்நிறைவேறி விடும். ஆனாலும் அறுபது லட்சம் ரூபாயையும் நாம் விநியோகம் செய்வது என்றகொள்கை முடிவை எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.

சவூதிக்கும், நமக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசத்தில் பெருநாள் வருவது தான்வழக்கம். சவூதியில் உள்ளவர்கள் பெருநாள் காலை வரை  பித்ராவை நமது கிளையில்கொடுப்பார்கள். தமிழகத்தில் பெருநாள் இன்னும் வராததால் அதைப் பெருநாளைக்கு முன்பேஇங்கே விநியோகித்து விட முடியும் என்பதால் அங்குள்ள கிளைகள் பெருநாள் காலை வரைபித்ராவை பெற்றுக் கொள்வார்கள்.

மேலும் பித்ரா என்பது ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு திரட்டப்பட்டது என்பதை அவர்கள்மொத்தமாக சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொல்லவும் முடியாது

பிறை 27ல் எங்கள் கணக்கில் இரண்டு லட்சம் எழுதிக் கொள்ளுங்கள் என்பார்கள். ஒரு மணி நேரம்கழித்து இன்னும் பத்தாயிரம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று உடனுக்குடன் அப்டேட்செய்வார்கள். தகவல் வருவதற்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படும். ஒருமாவட்டத்துக்கு ஐந்து லட்சம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படும் மறு நாள்மேலும் ஒரு லட்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வரும் தொகைக்கு ஏற்ப சொல்லப்பட்டுக்கொண்டு வரும்.

சில நேரங்களில் நாம் கடைசியாகத் தெரிவித்த தொகையை அவர்களால் விநியோகம் செய்யமுடியாமல் போய் விடும். கிளைகள் இனிமேல் விநியோகிக்க முடியாது என்று தெரிவித்தால்அந்தத் தொகையை தலைமையில் ஒப்படைப்பார்கள். நடைமுறையில் வளைகுடாவில் உள்ளசகோதார்கள் பெரு நாளைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் வழங்கினால் தவிரஅனைஅத்தையும் விநியோகிப்பது சாத்தியம் இல்லை. அதே நேரத்தில் சில ஆயிரங்கள் அல்லதுஓரிரு லட்சங்கள் மிஞ்சி விட்டாலும் நாம் ஏற்கனவே விநியோகித்த தொகையே பித்ராவை விடமூன்று மடங்கு அதிகமாக உள்ளதால் இது யாரையும் பாதிக்காது.

வளைகுடா விலைவாசிக்கும், தமிழக விலைவாசிக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சமுதாயம் அதிக நன்மை அடையும் வகையில் பயன்படுத்திக் கொள்வதால் இந்த நிலை ஏற்படுகிறது.

ஒரு வேளை வளைகுடாவிலும் தமிழகத்திலும் ஒரே தொகை தான் பித்ரா என்ற நிலைவருமானால் பெரு நாளைக்கு முதல் நாளே தந்தால் தான் எங்களால் விநியோகிக்க முடியும்என்று அறிவித்து விடுவோம். இன்றைய நிலையில் ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் நாணயமாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்கிறோம்.

மற்றவர்களைப் போல் ஃபித்ரா என்று வசூலித்து மக்களுக்கு விநியோகம் செய்யாமல் தங்கள்நிறுவனத்துக்கு பயன்படுத்துவதும், வந்தது எவ்வளவு என்பதற்கு விபரம் சொல்லாமல்இருட்டடிப்புச் செய்வதும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை

பித்ரா மோசடிக்காரர்களும் திருடர்களும் மக்களிடம் பித்ராவைத் திரட்ட முடியாமல் நம்பிக்கைஇழந்தவர்களும் இது பற்றி கள்ளப் பெயர்களில் கேள்வி கேட்கிறார்கள். விநியோகம் செய்யவேமுடியாத நிலை யாராக இருந்தாலும் நிச்சயம் ஏற்படும் அப்போது அதைக் கடலில் போடவேண்டும் என்கிறார்களா? அல்லது ஏப்பம் விட்டு விட்டு கள்ளக் கணக்கு காட்ட வேண்டும்என்கிறார்களா என்று தெரியவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் எவ்வளவு தான் முயன்றும் தன்னால் விநியோகம் செய்ய முடியாத நிலைஏற்பட்டதால் மிஞ்சிய சிறிதளவு தொகையை ஜகாத்தில் சேர்ப்பது இவர்களுக்கு ஆச்சரியமாகஉள்ளது. இத் பித்ரா கடமை அனைவருக்கும் நிறைவேறுவதைப் பாதிக்காது என்பதை முன்னர் நாம் அளித்த விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்

குறிப்பு : இந்த நிலைபாட்டை யாராவது ஒப்புக் கொள்ள மறுத்தால் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் தங்கள் பித்ராவை ஒப்படைக்காமல் இருக்கலாம். தங்களுக்கு நம்பிக்கையான நிறுவனத்தில் மூலம் தாராளமாகக் கொடுக்கலாம். அல்லது இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க தீர்வை சொல்லலாம்.

sorce:onlinpj.com

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…