“இஸ்லாத்தில் மனித நேயம்”

ஏக இறைவனின் திருப் பெயரால்…

இஸ்லாத்தில் நான் அறிந்தவரை மனித நேயம் அநேக இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. மனித நேயம் அல்லாத ஒன்றை இஸ்லாம் கூறியதாக தெரியவில்லை. மனித நேயம் என்பது ஒரு மனிதனின் செயல் எந்த வகையிலும் எந்த மனிதனுக்கும் இடையூறோ, துன்பமோ ஏற்படுத்தக் கூடாது. அந்த வகையில் மனித வாழ்க்கையில் அனைத்து செயல்களுக்கும் இஸ்லாம் வழி காட்டுகிறது.

வரதட்சணையை தடைசெய்வது, பெண்களுக்கு மஹர் கொடை அளிப்பது, நான்கு திருமணம் வரை திருமணம் செய்ய அனுமதித்தல், வட்டியை தடைசெய்தல், மது மற்றும் சூதாட்டத்தை தடைசெய்திருப்பது, குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளித்து அதை செயல்படுத்துதல், விவாகரத்தை அனுமதித்தல், ஜாதகம் மற்றும் சூனியம் போன்றவற்றின் மூட நம்பிக்கையை அடியோடு தகர்த்தெறிதல், விதியை நம்புதல், தற்கொலை செய்தவருக்கு நரகம் என இப்படி நிறைய கூறிக் கொண்டே போகலாம்.

வரதட்சனையை தடை செய்து, பெண்ணுக்கு மணக் கொடை கொடுக்க வலியுறுத்துவதின் மூலம் பெண்கள் முதிர் கண்ணிகள் ஆகாமல் அவரவர் பருவ வயதில் திருமணம் நடக்கும். வரசதட்சணைக்குப் பயந்து பெண் சிசு என்றாலே அந்தக் குழந்தையை கருவிலே கலைத்துவிடும் (அழித்து விடும்) நிலை காணப்படுகிறது. அவ்வாறு நடப்பது தடுக்கப்பட்டு தாய் சேய் நலம் காக்கப்படும். பெண் சிசுக் கொலைகள் நடைபெறாது. பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்கள் கண் கலங்க மாட்டார்கள். வரதட்சனை கொடுக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லாததால் நேர்மையற்ற வழியில் பொருளீட்ட தூண்டப்படமாட்டார்கள். வரதட்சனை கொடுமையால் முதிர் கண்ணிகள் மட்டுமில்லை, 35 வயது ஆகியும் திருமணமாகாத ஆண்களும் உள்ளனர். ஏனெனில் தனது அக்கா மற்றும் தங்கைகளை கரை சேர்க்க வேண்டுமென்பதற்காக பெருளீட்டுவதில் இவர்களின் பெரும் பகுதி வாழ்க்கை கழிந்து விடும். சிலர் வரதட்சனை கொடுக்க இயலாமல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. சிலர் வரதட்சனைக்காக கடன் வாங்கி விட்டு அதைக் கொடுக்க இயலாமல் விபரீதமான நிலைக்கு ஆளாவதும் உண்டு. வரதட்சணை என்ற ஒன்று இல்லையென்றால் அவரவர்களுக்கு அவரவர் பருவத்தில் திருமணம் நடக்கும். எந்த வீட்டிலும் ஸ்டவ் மற்றும் சிலிண்டர்கள் வெடிக்காது. சமூக மற்றும் ஒழுக்க சீர்கேடுகள் நடைபெறாது. மனித நேயம் தழைத்தோங்கும்.

நான்கு திருமணங்கள் வரை செய்து கொள்ள அனுமதித்தல் மூலம் சமூகத்தில் ஒழுக்க சீர்கேடுகள் தடுக்கப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் செய்யும் போது மனைவியர் அனைவர்களும் சரிசமமாக வைக்க வேண்டுமென்கிற போது தன்னால் அந்த அளவிற்கு இயலுமா? என சிந்தித்தே செய்வான். பிறர் மனை நோக்குவது தடுக்கப்படும். விபச்சாரம், வைப்பாட்டி வைத்துக் கொள்ளுதல் போன்றவைகளும் தடுக்கப்படும், பெண்களின் நலமும் கற்பும் பேணிக் காக்கப்படும். விதவை பெண்களுக்கு விவாகரத்தான பெண்களுக்கும் மறு வாழ்வு கிடைக்கக் கூடும். பெண்கள் கர்ப்பிணியாய் இருக்கும் போதும், குழந்தை பெற்ற பிறகும், உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் போதும் இன்னும் இது போன்ற பல தருணங்களில் ஆணின் தேவையை கருத்தில் கொண்டே நான்கு மனைவிகள் வரை இஸ்லாத்தில் அனுமதித்திருப்பதாக நான் கருதுகிறேன்.

ஆடை அணிவதின் ஒழுக்கம்
பர்தா அணிய வலியுறுத்துதல் மூலம் முக்கியமாக பாலியல் குற்றங்களையும் ஒழுக்க சீர்கேடுகளையும் வெகுவாகக் குறைக்கலாம்.

“நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கப்படும் – வாய் நாடி வாய்ப்பச் செயல்” என்று திருவள்ளுவர் வாக்கு போல, மனிதன் மற்றப் பெண்கள் மேல் ஏற்படும் தவறான எண்ணங்களுக்கு வழி கோலும் ஆடை அணிவதின் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதே, தவறான எண்ணங்களை அடியோடு ஒழிக்க முடியும். அதைத் தான் இந்த பர்தா அணிய வலியுறுத்துவதன் மூலம் இஸ்லாம் நடைமுறைப் படுத்துகிறது. ஆனால் இன்றைக்கு பெண்கள் நாகரீகம் மற்றும் பேஷன் என்ற பெயரில் உடுத்தும் ஆடைகள் எத்தனையோ குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. அதையெல்லாம் அவர்கள் தவிர்த்து பர்தா அணிவதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். பிறருக்கு தவறான எண்ணங்களை உண்டு பண்ணாது. அதனால் பாலியல் குற்றங்களை மிக வெகுவாகக் குறையும் இது போன்ற செய்திகளை வெளியிடும் நளேடுகள் பிற நல்ல செய்திகளை வெளியிட முனைவார்கள்.

வட்டியை தடை செய்திருத்தல்
வட்டி என்பது இன்றைய சமூகத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் பிரதான ஒரு தொழிலாக இருக்கின்றது. இது மிகக் கொடுமையான தொழிலாகும். வட்டியால் எத்தனையோ குடும்பங்கள் எவ்வளவு உழைத்தாலும் வறுமையைப் போக்கி தற்காப்பு நிலையை அடைய முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் வட்டியில் வரும் பணத்தை வட்டி (ராட்சத மோட்டர் போல்) உறுஞ்சுகிறது. வட்டிக்கு வாங்கியவர்கள் கொடுக்க இயலாத நிலையில், வட்டிக்கு கொடுத்தவர்கள் அவர்களை பேசும் பேச்சில் அவர்கள் தன்மானமிழந்து கூனி குறுகி விடுகிறார்கள்.

வட்டிக்கு கொடுத்து வருகிற பணத்தின் அருமை தெரியாது அவர்களுக்கு அதற்காக எந்த வித உழைப்பும் இல்லாமல் ஒரு முறை கொடுத்து விட்டு பல முறை வாங்கிக் கொண்டு இருப்பதால், அந்தப் பணத்தை அவர்கள் நல்ல வழியில் செலவு செய்யாமல் வீண் விரய செலவு செய்வார்கள். அது யாருக்கும் பலன் தராது. மனித நேயத்தை பாதிக்கும் செயல்களாகவே அவர்களின் செயல்கள் அமையும். ஆனால் நல்ல வழியில் உழைத்து சம்பாதிக்கும் பணத்தின் அருமை தெரியும். அதை அவர்கள் சிந்தித்து நல்ல வழியில் செலவு செய்வார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அது பயன் தரும்.

சில சமயங்களில் வட்டி கொடுத்துக் கொடுத்து வெறுத்துப் போய் மீண்டும் வட்டி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. வட்டியால் மனிதன் தனது சக்திக்கு மீறி ஆசைப்படுகிறான். அதை செய்து விடலாம், இதை செய்து விடலாம், இதைச் செய்யாமல் அப்படிச் செய்யலாம் என நினைத்து வட்டிக்கு வாங்கி எதை எதையோ செய்கிறான். முடிவில் வட்டி கொடுக்க இயலாத நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான். உதாரணமாக நமது தமிழ் நாட்டில் சிறு விவசாயிகள் எத்தனையோ பேர் டிராக்டர் கடனுக்கு வாங்கி விட்டு வட்டி கொடுக்க இயலாமல் வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியால் தனது சொத்துக்களை இழந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டுள்ள பட்டியல் மிக நீளமானது. வட்டி பிரதி பலனை எதிர்பார்ப்பதால் சிலரின் அவசர அவசிய தேவைகளுக்கு எவரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள். வட்டி என்று ஒன்று இல்லாவிட்டால் மேற்கூறப்பட்ட அனைத்து தீமைகளும் ஒழிந்து மனிதநேயம் தழைக்கும்.

மது மற்றும் சூதாட்டத்தைத் தடைசெய்திருப்பது
இன்றைக்கு தமிழ் நாட்டில் “மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு”, “குடி குடியைக் கெடுக்கும்” என்று மதுபானக் கடையின் பெயர் பலகையில் சிறிதாக ஒரு ஓரமாக எழுதி வைத்து விட்டு, மக்கள் நலன் காக்க வேண்டிய அரசே மக்கள் நலனை குறிப்பாக இளைஞர்களை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது. மதுவால் எத்தனையோ மனிதர்கள் தன்மானம், மரியாதை, சொத்து, நல்ல மனைவி மக்கள் ஆகியவற்றை இழந்துள்ளனர். எத்தனையோ இளைஞர்கள் மது குடித்து விட்டு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று மோதி, கை கால்களை உடைத்து, மற்றவர்கள் மீது மோதி அவருக்கு காயங்களை ஏற்படுத்தி விடுகின்றார்கள். இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி அவர்கள் தாம்பத்திய வாழ்வு பாதிக்கப்பட்டு, அதன் மூலம் சமூக சீர்கேடும், ஒழுக்க சீர்கேடும், தற்கொலைகளும் நிகழ்கிறது. எனக்கு தெரிந்த நான் வாழும் பகுதியில் எத்தனையோ பேர் சூதாட்டம் மூலம் தனது செல்வம் செல்வாக்குகளை இழந்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சேமிப்பையும் காலி செய்துள்ளனர்.

குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளித்தல்
திருட்டுக்கு கை வெட்டு, கற்பழிப்பு மற்றும் கொலைக்கு மரண தண்டனை, ஒருவர் எந்த வகையில் பாதிக்கப்பட்டாரோ அதே நிலையில் தான் பாதிக்கபடுவதற்கு காரணமாக இருந்தவருக்கு தண்டனை அளித்தல் போன்றவை மனித நேயத்தை காக்கும் சிறந்த செயலாகும். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனைகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு கொடூரமாக சிலருக்கு தெரியலாம். அது சரியான புரிதல் இல்லாததும் சிந்திக்காததுமே காரணமாகும். இவ்வாறு தண்டனைகள் கடுமையாக்கப்படும் போது ஒருவர் செய்த தவறை மறுபடியும் செய்ய நினைப்பதற்கு கூட வாய்ப்பில்லை. தண்டனை பெற்றவரை மற்றவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு இது போன்ற தவறுகளைச் செய்யும் எண்ணம் உண்டாகக் கூட வாய்ப்பில்லை. எனவே ஒரு தவறு மீண்டும் மீண்டும் நடக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எனக்கு தெரிந்த இந்திய தண்டனை சட்டத்திற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஒன்று உள்ளது. ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது (இதுதான் இந்திய தண்டனைச் சட்டம்) இந்த ஒரு பலவீனத்தை இந்தியாவில் உள்ள நிறைய கயவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக் கூடாது என்பது இஸ்லாமிய சட்டம்.

விவாகரத்தை அனுமதித்தல்
விவாகரத்தை அனுமதித்திருப்பது ஆண் பெண் இருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் ஒரு சுதந்திரமாகும். இதில் இருவருக்கும் பாதுகாப்பும், உரிமையும் உள்ளது. பிடிக்காத செயல்களை எப்படி செய்வது கடினமோ அப்படித்தான் பிடிக்காதவருடன் ஒத்துப் போகாதவருடன் வாழ்வது. விவாகரத்து அளிப்பதன் மூலம் எதிர் மறையான எண்ணங்கள் தோன்றாது. தற்கொலைகளும் கொலைகளும் நிகழாது.

இப்படி மனித நேயத்திற்கு எதிராக உள்ளவற்றை தடை செய்தும், மனித நேயம் தழைத்தோங்கும் செயல்களை அனுமதித்தும், ஊக்குவித்தும் இருக்கிறது இஸ்லாம். இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்களை மனித நேயத்தை உணர்த்துவதற்காக இருந்தாலும் நாள் மேற்கொண்ட தலைப்புக்களை குறிப்பாக எடுத்துக் கொள்வதற்கு காரணம், இவைகள் எனக்கு புரியாமல் இருந்த போது முன்னுக்குப் பின் முரணாக தெரிந்தது. ஆனால் இது போன்ற விசயங்களுக்கு காரணத்தை இதனைப் பற்றித் தேடும் போது புரிந்து கொண்டேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தளவிற்கு நான் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள உதவிய எனது இஸ்லாமிய நண்பர்களுக்கும், இஸ்லாமிய முகநூல் நண்பர்களுக்கும், ஆன்லைன் பீஜே இணைய தளத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக “இஸ்லாம் என் பார்வையில்” என்ற தலைப்பில் ஜூன் – 2013 ல் நடைபெற்ற பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரர் ஆர், அருள் முருகன் அவர்களின் கட்டுரை)

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…