இஸ்லாம் தடை செய்த பொருளாதாரத்தை தவிர்போம்

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!

இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தாங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது.

இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை திரட்டுவதிலும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றது.

தடை ஏன்?

எல்லையை மீறும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மைக்காகவே இதுபோன்ற எல்லைகளையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான்.

வரையரைகளை மீறுபவர்கள் மீது இறைவனின் கோபம் அவன் மீது ஏற்பட்டு விடுகின்றது. இதனால் அவனுடைய பிரார்த்தனையும், நல்லமல் களும் மறுக்கப்பட்டு விடுகின்றது.

மக்கள் பாதிக்கப்படும் போது மக்களில் சிலர் சமுதாயத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வட்டி, லஞ்சம், மோசடி, பதுக்குதல், அளவை நிறுவைகளில் குறைவு ஏற்படுத்துதல் போன்றவைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகின்றது.

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி காலத்தில் மக்கள் பொருளாதாரத்தை திரட்டும்போது வரம்பு மீறுவார்கள் என்று முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (2059)

போதுமென்ற மனமின்மை

அடுத்து நமக்கு வந்த செல்வங்களில் திருப்தியையும், போதுமென்ற மனத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

“அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக்கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது (19398)

தீய சம்பாத்தியத்தால் ஏற்படும் விளைவுகள்

இன்று மக்களில் அதிகமானோர் ஹராமான பொருளை சம்பாதித்தால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். திருக்குர்ஆனிலும் நபிமொழிகளில் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அருள்வளம் நீக்கப்படும்

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி (2079)

பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படாமல் போகுதல்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: (அல்குர்ஆன் 23:51) (அல்குர்ஆன் 2:172).

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார்.

ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக் கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறி னார்கள். நூல்: முஸ்லிம் (1844)

சாபத்திற்குரியோர்

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.  (அல்குர்ஆன்86 : 1- 6)

நரகம் பரிசாகும்

நபி ஸல் அவர்கள், “யார் தன்னுடைய சத்தியத்தின் மூல மாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் (196)

தவறான முறையில் பொருளை ஈட்டுவதால் இறைவனின் அன்பை விட்டும் அவனின் அருளை விட்டும் தூரமானவர்களாக மாறி நகரவாதிக ளாக நாம் மாற வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொருளாதராத்தை இறைவன் அனுமதித்த முறையில் ஈட்ட முயற்சி செய்வோம்.

இந்த fileயை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…