இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!

ரியாத் :- 74வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் 106வது மாபெரும் இரத்ததான முகாம் நேற்று 14-08-2020 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

பல்வேறு நோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் காலை 9:00 மணிக்கு துவங்கிய இம்முகாமில் தன்னார்வ தொண்டர்கள் கொடையாளிகளை பாதுகாப்புடன் இரத்த வங்கிக்கு அழைத்து வந்தனர்.

மேலும் கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று ஒரு வார கால அவகாசத்திற்கும் குறைவான நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் ரியாத் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்தும் “145க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு, 119 பேர் வரை பதிவு செய்யப்பட்டு” உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு “106 நபர்கள் இரத்ததானம்” செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. அஹமது முக்தார் கூறுகையில் எங்களது ஜமாஅத் சார்பாக இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் கொரோனோ பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை போக்கும் விதமாகவும், எப்படி எங்களின் முன்னோர்கள் இந்திய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டின் தேச நலனிற்காகவும் போராடினார்களோ, அது போன்று நமது நாட்டின் நலனுக்காகவும், பிற நாட்டின் நலனுக்காகவும் 100க்கும் மேற்பட்ட இரத்ததான முகாம்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக நிகழ்கால கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளின் இரத்த தேவைகளை கருத்தில் கொண்டும், மருத்துவமனைகளின் கோரிக்கைகளை ஏற்றும் தேவையான எல்லா நேரங்களிலும் உயிர் காக்கும் இரத்ததானம் செய்து வருகின்றோம். கொரோனோ பேரிடர் காலத்தில் மட்டும் அவசர தேவைக்காக இதுவரை 250 யூனிட்கள் வரை இரத்தம் தானமாக ரியாத் மண்டலம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

முகமறியாத மக்களின் உயிர்காக்க உதவும் இந்த உன்னதமான பணி இந்திய நாட்டின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் விதமாகவும், இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை பிறநாடுகளில் பிரதிபலிப்பது இந்தியர்களின் தியாகங்ககளையும், தேச பற்றையும் பிறநாடுகள் போற்றும் விதமாக அமைந்துள்ளதாகவும், இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்தும் 106வது முகாமாகும் என்றார்.

…எல்லா புகழும் இறைவனுக்கே….

என்றும் மனிதநேயப் பணியில்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ரியாத் மண்டலம்.

 
RIYADH | TNTJ | BLOOD | CAMPING | KSMC | KFMC | COVID19  | EMERGENCY

Related Posts

சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!

சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!

ரியாத்:- உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் மற்றும் புனிதமான ஹஜ் மாதத்தில் ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!! அசாதாரணமான சூழலும் தொடர் நோய்த்தொற்று காலமாக இருந்தாலும் பிறர் நலம் காக்கும் நோக்கத்தில்…

இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!

இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!

சவூதி அரேபியா:- எண்ணற்ற கனவுகளுடன் தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ள இந்தியர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக செலவிட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ)…

மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை

மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக இன்று 25/12/2020 வெள்ளிக்கிழமை (காலை 10:30 மணி முதல் மாலை 04:0 மணி வரை) சுலைமானியா மதுரா, அனார்கலி ஹோட்டல் எதிரில் (தாய்மடி ஹோட்டல்…

மொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை

மொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் நியூ சென்னையா கிளை சார்பாக இன்று 18/12/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை) ரியாத் நியூ இன்டர்ஸ்ட்ரியல் ஏரியா, துபாய் மார்க்கெட்…

மொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை!

மொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் – சித்தீன் கிளை சார்பாக இன்று 27/11/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை) துப்பாத் (ஹாரா) பகுதியில் கிங் ஃபஹத் மெடிக்கல்…

மொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை!

மொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக இன்று 13/11/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:30 மணிமுதல் மாலை 05:00 மணிவரை) ஹாரா பகுதியில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையுடன் இணைந்து…

Leave a Reply