Home / சேவைகள் / இரத்ததான முகாம் / தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்திய 100வது இரத்ததான முகாம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்திய 100வது இரத்ததான முகாம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (சுமைஸி) மருத்துவமனையில் 100-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் (193) மேற்பட்ட சகோதரர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் (175) நபர்கள் இரத்ததானம் செய்தனர். மருத்துவமனையின் இரத்தப் பற்றாக்குறை மற்றும் அவசர தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாம் தேதிக்கு நாட்கள் குறைவாக இருந்தாலும் நமது சகோதரர்களின் உழைப்பால் அதிகமான மக்களிடம் இந்த தகவலை கொண்டு சென்று விழிப்புணர்வு செய்ததின் விளைவாக தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமில்லாமல், பிற மாநில மற்றும் பிற நாட்டு சகோதரர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்… அல்ஹம்துலில்லாஹ்!

இந்த முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல நிர்வாகிகள் & கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பாக நடைபெற்ற முகாமிற்கும், ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனை இயக்குனர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

About riyadhtntj

Check Also

TNTJ Riyadh organizes blood donation drive in Riyadh

Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter Organized its 88th Blood Donation Camp in coordination with King …

Outstanding blood donor social service organization TNTJ honored by KSMC.

RIYADH: The King Saud Medical City – Riyadh, under the aegis of the Ministry of Health, …

TNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி கிங் சவுத் (சுமைஸி) மருத்துவமனையின் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.

சவுதி அரேபியா சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமைஸி) மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் …

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 87வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் …

TNTJ Riyadh Chapter organized 87th massive blood donation camp in KSMC

Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 87th Blood Donation Camp in coordination …