திருக்குர்ஆன் வழியில் நன்மையை ஏவி தீமையை தடுப்போம்

முன்னுரை

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

பொதுவாகத் தீமைகள் செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் தீமைகளைக் கண்டிப்பதும் எச்சரிப்பதும் இல்லாவிட்டால் தவறுகள் பெருகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. நன்மையை மட்டும் ஏவி, தீமையைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களால் எக்காலத்திலும் மக்களை திருத்த முடியாது.

இதற்குப் பொருத்தமான உதாரணமாக தப்லீக் ஜமாஅத்தினரை எடுத்துக் கொள்ளலாம். நன்மை வந்து விட்டால் தீமை தானாகச் சென்று விடும் என்று சொல்லிக் கொண்டு நன்மையை மட்டும் ஏவி வந்தார்கள். இதனால் நன்மையைச் செய்யும் நல்லவர்கள் ஒரு பக்கம் உருவானாலும் சமுதாயத்தில் வட்டி, வரதட்சணை, இணை வைப்பு, ஒழுக்கக் கேடுகள் இன்னும் ஏராளமான பாவங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது.

மேலும் அவர்களால் உருவாக்கப்பட்டவர்களில் பலர் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதைப் போல் தீமையான காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தான் தீமைக்குத் துணை போவது என்பது இவர்களுக்கு ஒரு பாவமாகவே தெரிவதில்லை.

ஆனால் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி தொடங்கியது முதல், நன்மைகளை எடுத்துரைப்பதைக் காட்டிலும் தீமைகளை அகற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளைக் களைவதில் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் பெரும்பாடுபட்டார்கள். அவர்களின் அதிகமான உரைகள் தீமைகளைக் கண்டித்த வண்ணமே இருந்தது. குற்றங்களைக் கண்டித்ததோடு மட்டுமில்லாமல் எந்த ஒரு சூழ்நிலையிலும் தீமைக்கு யாரும் துணை போய்விடக் கூடாது என்றும் மக்கள் மனதில் பதியச் செய்தார்கள்.

இதன் விளைவாக சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த வரதட்சணை, வட்டி, இணை வைப்பு, அனாச்சாரங்கள் போன்ற பாவங்களிலிருந்து கணிசமான மக்கள் விலகிக் கொண்டார்கள். சிறு சிறு தவறுகளைத் தவிர்த்து முழுக்க முழுக்க நன்மைகளை மட்டுமே செய்யும் மக்கள் உருவானார்கள். இந்த மக்கள் தங்களின் வாழ்க்கையின் மூலம் இவையெல்லாம் பாவங்கள் என்று மக்களுக்கு உணர்த்தியதால் மற்ற கொள்கையில் உள்ளவர்களும் இத்தீமைகளை உணர்ந்து கொண்டார்கள். பலர் தங்களை திருத்திக் கொண்டார்கள்.

ஒரு காலத்தில் தவறே கிடையாது என்று கருதி, பகிரங்கமாகச் செய்யப்பட்டு வந்த பாவங்கள் இன்றைக்கு மறைமுகமாகச் செய்யப்படும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மறுமலர்ச்சிகள் எல்லாம் தீமைகளுக்கெதிராகக் குரல் கொடுத்ததன் விளைவாகத் தான் ஏற்பட்டது.

வெற்றி பெறுபவர்கள் யார்?

தீமைகளை கண்டிப்பது அவசியமானது என்பதால் தான் நன்மைகளை ஏவ வேண்டும் என்று இறைவன் கூறும் போது, தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றும் இணைத்தே கூறுகிறான். நன்மையை ஏவுவதுடன் தீமையைத் தடுப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

நன்மையை ஏவி தீமையை தடுப்பதினால்தான் சிறந்த சமுதாயம்

மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன் 2:110)

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது. (அல்குர்ஆன் 22:41)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (அல்குர்ஆன் 9:71)

(அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப் பவர்கள். (அல்குர்ஆன் 9:112)

நபி (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் செய்த முதன்மை பனி நமையை ஏவி தீமையை தடுப்பது

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். (அல்குர்ஆன் 7:157)

அழிவைத் தேடித்தரும் குற்றம்!

தீமையைத் தடுக்காமல் இருப்பது தீயவர்களின் பண்பாகும். அல்லாஹ்வின் அழிவைத் தேடித்தரும் குற்றமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

”கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

“அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)” எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்.” (அல்குர்ஆன் 7:163-166)

தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதிருந்தோர் ஆகிய மூன்று வகையினரில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் காப்பாற்றியதாக இவ்வசனம் கூறுகிறது. தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்த்து அழிக்கப்பட்டனர் என்றும் இவ்வசனம் கூறுகிறது. தீமையைத் தடுக்காமல் தம்மளவில் நல்லவர்களாக வாழ்வோர் இறைவனின் திருப்தியைப் பெற முடியாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இந்த fileயை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…