Home / அழைப்பு பணி / நோட்டீஸ்கள் / அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்

அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, வணக்க வழிபாடுகள் புரிந்து, நல்ல முஸ்லிம்களாக  வாழ்ந்திட வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் பல முஸ்லிம்களிடம் இருக்கின்றது. எனினும் அதனடிப்படையில் செயல்படத் துவங்கும் போது ஷைத்தான் ஏதேனும் வழியில் குறுக்கிட்டு அத்தகைய நன்மக்களை நல்லமல்கள் புரிவதை விட்டும் தடுத்து, கெடுத்து விடுகிறான்.

قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ(7:16)ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ(7:17)

“நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று (இப்லீஸ்) கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்”(என்றும் கூறினான்).திருக்குர்ஆன் 7:16,17

நல்லோர்களை வழிகெடுப்பதே ஷைத்தானின் இலக்கு என்பதால் நன்மைகள் புரிவதற்கு பெரும் தடைகல்லாக ஷைத்தான் திகழ்கிறான் என்பது உறுதி. அவனது சதிவலைகளைத் தாண்டி நல்லமல்கள் புரிய வேண்டும் எனில் அதற்கு இறையருள் அவசியம் தேவையான ஒன்றாகும்.

இறைவனை வழிபடுவதற்கு இறையருள் தேவை என்பதால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

عَنْ الصُّنَابِحِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ وَقَالَ يَا مُعَاذُ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ فَقَالَ أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ وَأَوْصَى بِذَلِكَ مُعَاذٌ الصُّنَابِحِيَّ وَأَوْصَى بِهِ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ

நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, “முஆதே! உன்னை நான் நேசிக்கின்றேன். அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக

பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : முஆத் (ரலி), நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 1286

எனவே நன்மைகள் புரிய இறையருள் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்தும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் குர்ஆன், ஹதீஸ் கூறும் சில முக்கிய தகவல்களைக் காண்போம்.

சொர்க்கம் செல்ல காரணி

முஸ்லிம்களின் இலக்கு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. அத்தகைய சொர்க்கத்தினுள் மனிதர்கள் செல்ல தங்கள் வழிபாடுகளை விடவும் முக்கிய காரணமாக இறையருளே திகழ்கிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ يُنَجِّيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَةٍ سَدِّدُوا وَقَارِبُوا وَاغْدُوا وَرُوحُوا وَشَيْءٌ مِنْ الدُّلْجَةِ وَالْقَصْدَ الْقَصْدَ تَبْلُغُوا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)” என்று கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களது நற்செயல் காப்பாற்றாது)?” என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் (தனது) அருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, “(ஆகவே,) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்). நடுநிலை(யைக் கடைப்பிடியுங்கள்). (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள் என்று சொன்னார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6463

சிறந்த செல்வம்

மனிதர்கள் திரட்டும் செல்வங்கள் அனைத்தையும் விட இறையருளே மிகச் சிறந்த செல்வமாகும்.

وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ(3:157)

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.திருக்குர்ஆன் 3:157

எல்லையில்லா இறையருள்

அல்லாஹ்வின் அருளுக்கு வரம்போ, எல்லையோ கிடையாது. ஒரு மனிதன் இறையருளின்மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டால் அவன் எங்கிருந்தபோதும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இறையருள் அவனுக்கு கிட்டிவிடும். இறையருளை எந்தச் சூழலும் தடுக்க முடியாது. எந்த மனிதனும் தடுத்து விட முடியாது.

مَا يَفْتَحْ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(35:2)

மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அவனுக்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். திருக்குர்ஆன்.35:2

நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றில் இருந்த போதிலும் அன்னாரது தொடர் பிரார்த்தனையால் இறையருளைப் பெற்று மீன் வயிற்றிலிருந்து விடுதலையானார்கள்.திருக்குர்ஆன்  37:142,143,144 மற்றும் 21:87,88

நபி மூஸா (அலை) அவர்களும் அவர்களுடன் நம்பிக்கை கொண்ட மக்களும் பிர்அவ்னிடமிருந்து தப்பிக்க ஓடிச் சென்றபோது கடல் குறிக்கிட்ட்து. தரையில் வழி ஏற்படுத்தப்படுவதைப் போன்று இறையருளால் கடலில் வழி ஏற்படுத்தப்பட்டது. திருக்குர்ஆன் 66:61,62,63

மழையின்போது குகையில் மாட்டிக் கொண்ட மூவர் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் உதவி செய்ய யாருமில்லாத, ஆள்அரவமற்ற அந்தக் குகையிலும் அவர்கள் இறையருளைப் பெற்று குகையிலிருந்து விடுபட்டார்கள் என்பதை ஹதீஸில் அறிகிறோம்.புகாரி : 2333

பொதுவாக ஏனைய மதங்களில் கடவுள் அருளைப் பெற அவர்கள் கூறும் வழிமுறைகள் யாவும் பெரும் சிரமத்துடன் கடைப்பிடிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

முட்பாதைகளில் வெறுங்காலுடன் நடத்தல், தீ மிதித்தல், முகம் கை கால்களில் வேல் குத்துதல், மொட்டையடித்தல், தலையில் தேங்காய் உடைத்தல் என்று எண்ணற்ற, மனிதர்களை வதை செய்யும் வழிமுறைகள் கடவுளின் அருளைப் பெறும் முறைகளாக ஏனைய சித்தாந்தங்கள் முன்வைக்கின்றன.

ஆனால் இஸ்லாம் இவைகளை முற்றாக எதிர்ப்பதுடன் பெரும் பாக்கியம் நிறைந்த இறையருளை சில எளிய வழிமுறைகள் மூலம் நாம் பெற்றுவிடலாம் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் கற்றுத் தருகின்றன. அவைகளைக் காண்போம்.

இந்த நோட்டீஸ் download செய்யவும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்

 

About admin1

Check Also

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் …

நபி மீது பொய்! நரகமே பரிசு!

இது “ரபீஉல் அவ்வல்” மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் …

இவரை உங்களுக்குத் தெரியுமா?

இவரை உங்களுக்குத் தெரியுமா? “இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்” என்று இவரைப் பற்றி பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார். யார் அவர்? 200 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் இவரை …

திருக்குர்ஆன் பார்வையில் உணவு!

உணவு ஓர் அருட்கொடை: உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான …

திருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்!

அல்லாஹ்வின் படைப்பில் இயங்கும் இவ்வுலகில் ஒவ்வொரு படைப்பும் தமக்குரிய பண்புகளோடு வாழ்கின்றன. படைப்புகளில் ஓர் உன்னத படைப்பாக வாழும் மனிதர்களும் …