சாதித்துக்காட்டுவோம்!!
ஏக இறைவனின் திருப்பெயரால்
சாதித்துக்காட்டுவோம்!!
ஆர்வமும் தன்னம்பிக்கையும்
மனிதனாக பிறந்த அனைவருக்கும் இறைவன் ஒரே மாதிரியாக சிந்திக்கக் கூடிய மூளையையே படைத்துள்ளான் ஆனால் சில மாணவர்கள் 100 மதிப்பெண்களும், இன்னும் சிலர் 80 மதிப்பெண்களும், இன்னும் சில மாணவர்கள் தோல்வியை தழவுகின்றனர் என்றால் அதற்கு என்ன காணரம்? பள்ளி வகுப்பறையில் படிக்கும் 60 மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒரே மாதிரியாகத் தான் பாடம் நடத்துகிறார். பின்பு எதனால் இந்த வித்தியாசம் என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டும். படிப்பில் நமக்கு ஆர்வமும், ஈடுபாடும் இல்லாததே இதற்கு அடிப்படைக் காணரம்.
ஆபாசமான சிரமமான புரியாத பல வார்த்தைகளைக் கொண்ட சினிமா பாடல்களின் மீது நாம் செலுத்தும் ஆர்வம் அவைகளை நன்றாக உள்ளத்தில் பதிவு செய்ய வைக்கிறது இதைவிட அதிகமான ஆர்வத்தை நமது எதிர்கால நன்மைக்காக படிப்பில் செலுத்தினால் உறுதியாக வெற்றி பெறலாம் (இறைவன் நாடினால்).
பிறரால் செய்ய முடிந்தது, நம்மால் ஏன் செய்ய முடியாது என்ற தன்னம்பிக்கையும் விடா-முயற்சியும் வந்ததென்றால் அதுவே சாதனையின் முதல் படிக்கட்டு என்பதை உணரலாம்.
தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு ஆலோசனைகளையும் பயணுள்ள தகவல்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தரப்பில் தருகிறோம்.
திட்டமிடுதல்
பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட நாம் அதற்கான சில தயாரிப்பு முறைகளை முன்கூட்டியே திட்டமிடுபவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நேரத்தைம் உழைப்பையும் பயணுள்ளதாக அமைத்திட திட்டமிடுதல் மிகவும் அவசியமாகும்.
- பாடத்தையும் நேரத்தையும் முறைப்படுத்துதல்
- தேர்வை எதிர்கொள்ள தயாராகுதல்
- தேர்வில் திறமையை வெளிப்டுத்துதல்
பாடத்தையும் நேரத்தையும் முறைப்படுத்துதல்
- தேர்வுக்கான பாடப்புத்தகங்களை முழுமையாக சேகரித்து தனித்தனியே பாடவாரியாக பிரித்து வைக்க வேண்டும். காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணிவரையுள்ள இடைப்பட்ட நேரத்தை இறைவழிபாட்டிற்கு, படிப்பிற்கு, தூய்மை அடைவதற்கு, உணவு உண்பதற்கு, சிறிது விளையடுவதற்கு மற்றும் ஓய்வெடுப்பதற்கு என்ற வகையில் பிரித்து அமைக்க வேண்டும்.
- ஒரே பாடத்தைப் படித்து மூளைக்கு சோர்வு ஏற்படுத்தாமல் வெவ்வேறு பாடங்களை நேரத்திற்கு தகுந்தபடி பிரித்து படிக்க வேண்டும். இலகுவானதை முதலில் படித்து விட்டு பிறகு சிரமமானதை படியுங்கள்.
- படிக்கும் பாடத்தை முதலில் சாதாரணமாக படியுங்கள், பிறகு ஆழமாக கருத்துணர்ந்து படியுங்கள், பிறகு படித்ததை மனதிற்குள் அசைபோட்டு பாருங்கள், புரிந்ததை எழுதிப் பாருங்கள்.
- குறள், தத்துவம், ஃபார்முலா, Poem போன்றவற்றை சிரமம் பாரால் மனனம் செய்து படியுங்கள்.
- படிக்கும் போது தூக்கமோ, சோர்வோ ஏற்பட்டால் நிலையை மாற்றி நின்றோ, நடந்துகொண்டோ படியுங்கள்.
- Group Study என்ற பெயரில் நேரத்தையும், உழைப்பையும் வீணாக்காதீர்கள், சந்தேகங்கள் எதுவானாலும் தயங்காமல் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்
தேர்வை எதிர் கொள்ளுதல்
பாடங்களை படிப்பதிலும், நேரத்தை செலவிடுதலிலும் அதிக கவனம் செலுத்துவதை போல் தேர்வை எதிர் கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.
- தேர்வு கால அட்டவனையை (Exam time table) உங்கள் பார்வைக்கு தெளிவாக தெரியும் வகையில் பொதுவான இடத்தில் ஒட்டி வைக்கவும்.
- இரவு நேரங்களில் அதிகமாக கண் விழித்து படிக்காமல் குறைந்தது 6மணி நேரமாவது தூங்குங்கள். இது உங்கள் பார்வைக்கும் மூளைக்கும் ஓய்வை தரும்.
- ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள் அதிகமாக தண்ணீர் பருகுங்கள்.
- சிறிது நேரம் இறைவழிபாடு செய்யுங்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விளையாடுங்-கள். மனதை அமைதி படுத்துங்கள் தேர்வு பற்றிய வீணான வதந்திகளை நம்பாதீர்கள்.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களிடம் தேவையற்ற சண்டைகள், வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். பொதுத்தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு காரியங்களில் கவனத்தை சிதற விடாதீர்கள்.
- Hall Ticket பேனா, பென்சில், ரப்பர், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற தேவையான உபகரணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைக்கவும்
- தேர்வு நாள் நெருங்கிய உடன் எல்லா மாணவ மாணவியருக்கும் ஒரு விதமான பயமும் படபடப்பும் ஏற்டுவது இயல்பு, இந்நிலையில் மனதை அமைதிபடுத்தி இறைவனிடம் பிராரத்தனை செய்து மனஉறுதியுடன் தேர்வுக்கு புறப்படுங்கள்.
- தேர்வு நாளில் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு சென்று விடவும், போக்குவரத்து சூழ்நிலைகளால் ஏற்படும் இடையூறுகள் தவிர்க்க இயலாது.
- தேர்வெழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வைறைக்கு சென்று விடவும். நண்பர்களிடம் தேவையற்ற உரையாடல்களை தவிர்க்கவும்
- தேர்வறைக்குள் நுழைந்தவுடன் உங்கள் சட்டை பை, பேன்ட் பாக்கெட் ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுமையாக பரிசோதித்து கொள்ளுங்கள். தேவையற்ற பேப்பர்களை தூக்கி எறிந்து வடுங்கள்
தேர்வில் திறமையை வெளிப்படுத்துதல்
- தேர்வுக்காக பல மாதங்கள் சிரமப்பட்டு படித்ததும் பல உழைப்புகள் செய்ததும். தேர்வின்போது முழமையாக வெளிப்படுத்த வேண்டும்.
- கேள்வித் தாளில் கையில் கிடைத்ததும் உடனே பரீட்சை எழுத தொடங்காமல் அதை முழுமையாக படித்துக்கொள்ள வேண்டும்.
- நன்றாக தெரிந்து கேள்விகளை முதலில் எழுதுங்கள் பிறகு ஓரளவு தெரிந்து கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள் தவறாக இருக்குமோ என்ற அச்சம் வேண்டாம் எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள் வினா-விடை எண்களை சரி பார்த்து எழுதுங்கள்.
- பக்கம் பக்கமாக பதில் எழுதாமல் குறிப்பு குறிப்பாக (Points & Bullets) எழுதுங்கள் தலைப்புகள், முக்கய வரிகள், சமன்பாடுகள் (Equations) போன்றவற்றை தெளிவாக (Blue and Black penல்) எழுதுங்கள்.
- ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள் ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்று விடுங்கள் ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம், அருகில் கைக்கடிகாரம் ஒன்றை வைத்து நேரத்தை சரியாக செலவிடவும்.
- எழுதும்போது சிறிய தவறுகள், எழுத்துப்பிழைகள் நிகழ்ந்தால் உடனே அழித்துத் திரித்தி செய்த தவறை நீங்களே காட்டிக் கொடுத்து விடாதீர்கள்.
- எல்லா வினாக்களுக்கும் விடை எழுதியப் பிறகு நேரம் இருந்தால் விடைத் தாளை அழகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.
- தேர்வு முடிந்ததற்குப் பிறகு தேர்வு அறையை விட்டு வெளியே வந்து வினாத்தாளையும், விடைகளைப்பற்றியும் நன்பர்களிடம் உரையாடாதீர்கள் அடுத்த தேர்வுக்கு உங்களை தயார் படுத்துங்கள்.
இந்த கோப்பு பதிவிறக்கம் செய்ய – சாதித்துக் காட்டுவோம்