Home / சேவைகள் / மனிதநேய பணிகள் / கடல் கடந்த மனித நேயப் பணியில் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம்!!!

கடல் கடந்த மனித நேயப் பணியில் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம்!!!

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் போதிக்கின்றது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும். இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 39:13

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது!?

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376

மனிதாபிமான அடிப்படையில் பெருந்தன்மையுடன் 90 நாள் பொதுமன்னிப்பை அறிவித்து அதற்குள் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவரை வெளியேறிக் கொள்ள வலியுறுத்தியுள்ளது சௌதி அரேபிய அரசு… இதனை தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் ரியாத் மண்டலம் பாராட்டுவதோடு, இந்திய குடிமக்களின் சார்பாக நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றது.

கொளுத்தும் வெயிலில்…
கி.மீ தூரத்திற்கு மக்களின் வரிசை…
கொளுத்தும் வெயிலில் குடிக்கின்ற தண்ணீர் கூட வெந்நீராகிப் போகும் நிலையில்…

மனைவி மக்களுக்காக தன் நாடு, குடும்பத்தை விட்டு சௌதி அரேபிய மண்ணில் பிழைக்க வந்தவர்கள்.

இதில் இந்தியர், பாகிஸ்தானியர், இலங்கையர்,இன்ன பிற அரபு மற்றும் ஆஃப்ரிக்க நாட்டவர்கள் என அத்துனை பேரும் நீண்ட வரிசையில் அமர்ந்துள்ளனர்.

இவர்கள் இப்படி நிற்க காரணம் என்ன?

தாயகத்தில் இருந்து வரும்பொழுது எந்த வித ஆலோசனையும், விசாரணையும் இன்றி எஜண்டுகள் சொல்வதை எல்லாம் நம்பி வந்து விட்டு, இங்கு கொடுக்கும் பணிகளை செய்யாமல் கஷ்டப்படுபவர்கள், பணிபுரியும் நிறுவனத்தில் சம்பள பிரச்சனைகளினாலும், ஓட்டுனராக வந்து அதில் ஏற்படும் பிரச்சனை, தாயகத்தில் ஏஜெண்ட் நம்பி இங்கு வந்து ஏமாற்றப்பட்டவர்கள்… இவ்லகு சிரமங்களுக்கு மத்தியிலும் தனது வியர்வையை, இரத்தமாக சிந்தி பாடுபட்டு தனது தாய் நாட்டிற்காக அன்னிய செலவாணியாக ஈட்டி தரக்கூடிய கூடிய வெளிநாட்டு தொழிலார்களுக்கு தக்க வேலைவாய்ப்புகளை வழக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கையாக முன் வைக்கின்றோம்.

“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்”. (அல்குர்ஆன் 5:32) என்ற திருமறை வசனத்திற்கேற்ப…

TNTJ ரியாத் மண்டலத்தின் சார்பாக குடிதண்ணீர், பழசாறு போன்றவற்றை அங்கு கூடியுள்ள மக்களுக்கு வழக்கி மனித நேயப் பணியை செய்து வருகிறது…

அதன் தொடர்ச்சியாக…

சவுதி அரசு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து மக்கள் இந்திய தூதரகத்தில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

அதில் பலர் தற்காலிக பாஸ்போட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்க முடியாத நிலையில் தவிப்பதையும் காணமுடிகிறது.

மக்கள் சிரமத்தை குறைப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ரியாத் மண்டல மர்கஸில் (மண்டல தலைமை அலுவலகம்-பத்தாஹ்)
இன்ஷா அல்லாஹ், இரவு 7 மணி முதல் 9:30 மணி வரை பயண ஆவணத்திற்கு தேவையான விண்ணப்பங்களும் பூர்த்தி செய்து கொடுக்கும் பணிகளும் நடைபெறுகிறது…

அத்துடன் தயக்கம் திரும்புவர்களுக்கு பயண ஆவணங்கள் முறையாக பெற்றுவது எப்படி உட்பட குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் பெறுவது எப்படி போன்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றது…..அல்ஹம்துலில்லாஹ்…

என்றும் மனித நேய பணியில்…
தமிழ் நாடு தவ்ஹீத்ஜமாஅத் – ரியாத் மண்டலம்.

 

About riyadhtntj

Check Also

On the eve of Saudi Arabia 90th National Day, Mega Blood Donation Camping were Conducted in Saudi Capital

On the eve of the 90th National Day of Saudi Arabia ,Tamil Nadu Thowheed Jamath …

சவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் …

TBNNEWSCHANNEL – Urdu Interview.

Riyadh (KSA):- TNTJ organised the 106th Blood donation camp while celebrating the 74th Independence Day …

“Indian Expatriates Celebrate Independence Day spirit by donating blood”

Riyadh (KSA):- Indian community here in Riyadh, Saudi Arabia celebrated their country’s 74th Independence Day …

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!

ரியாத் :- 74வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் 106வது …