TNTJ ரியாத் மண்டலம் சார்பாக 68வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு 20.01.2017 வெள்ளிக்கிழமை அன்று ரியாதிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) யுடன் இணைந்து மாபெரும் 55வது மெகா இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 445 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை கார மாக 239 பேர் மட்டும் இரத்த கொடை அளித்தனர்… மாலை 5:00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 445 நபர்களோடு பதிவு செய்வது நிறுத்தப்பட்டு சுமார் 108 லிட்டர் இரத்தம் கொடையாக பெறப்பட்டது…. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்….
….எல்லா புகழும் இறைவனுக்கே ….