கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்

*கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்*

இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்கள் தங்கள் உயிர், உடைமைஅத்தனையையும் இழந்தனர். அத்துடன் நில்லாமல், “அடிமை இந்தியாவெள்ளையர்களிடமிருந்து நில அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையிலும்பெறுவது மட்டும் விடுதலையாகாது; வெள்ளையரின் கல்வி, கலாச்சாரம், பண்பாடுஅடிப்படையிலும் விடுதலை பெற வேண்டும்’ என்ற நோக்கில் “ஆங்கிலம் படிப்பதுஹராம்’ என்று முழங்கினர்.

இந்தக் கலாச்சார விடுதலை தான் வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து, ஆங்கிலஆதிக்கபுரிகளிடமிருந்து அடைகின்ற முழுமையான விடுதலை என்று முடிவு கட்டி,முழு மூச்சாகக் களமிறங்கினர்; அதில் வெற்றியும் கண்டனர். ஆனால் நாடுவிடுதலை பெற்ற பிறகு அது முஸ்லிம்களுக்குப் பெரும் பாதகமாக அமைந்தது.

வெள்ளையர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் இன்று கல்வி, அரசியல்,பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேறி விட்டனர். ஆனால்முஸ்லிம்களோ பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெரிய பின்னடைவைஅனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் உந்தி எழுந்து, எகிறி மற்றசமுதாயங்களைக் காட்டிலும் முந்தி வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

கல்வித் துறையில் முன்னேறிய ஒரு சமுதாயம் கிறித்தவ சமுதாயம் என்றுஅடித்துச் சொல்லலாம். கல்வி, மருத்துவம் என்ற இரண்டு துறைகளையும் கையில்எடுத்துக் கொண்டு அந்தச் சமுதாயம் முன்னேறியது. இவ்விரண்டிற்கும் சேவைசெய்கிறோம் என்ற சாயத்தைப் பூசிக் கொண்டு, கிறிஸ்தவம் என்பதைக் குறியீடாகக்கொண்டு இன்று வரை செயல்படுகின்றது. இந்த இரண்டு துறைகள் மூலம் வலிந்து கிறிஸ்தவ மதத்தைத் திணிக்கின்றனர்.

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்”எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர்பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்குஇல்லை. அல்குர்ஆன் 2:120

அல்லாஹ் சொல்வது போன்று அவர்களின் அந்த முயற்சியில் பின்தங்காமல்முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த வகையில் முஸ்லிம்களைப்பார்த்தால் இவ்விரு துறைகளிலும் பூஜ்யமாகவே உள்ளனர். இவர்களிடம் உள்ளபொருளாதாரம் அனைத்தும் கல்யாணப் பந்தல்களிலும் விருந்துகளிலும் காலியாகி,கரைந்து போய்க் கொண்டிருக்கின்றது. இதனால் முஸ்லிம்களிடம் இவ்விருதுறைகளிலும் வெற்றிடமே நிலவுகின்றது.

குறிப்பாக, தவ்ஹீது சிந்தனை கொண்ட கொள்கைவாதிகள் இந்தக் கிறித்தவ கல்விநிறுவனங்களால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

தமிழகத்தில் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே 12ஆம் வகுப்பு வரைபள்ளிக் கல்வியாகும். இதற்கு 10ஆம் வகுப்பு முடிந்தவுடன் எஸ்எஸ்எல்சிசான்றிதழும் 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் எச்.எஸ்.சி. சான்றிதழும் வழங்குகின்றனர்.இதற்குப் பின்னால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களைத் தேர்வு செய்துகல்லூரியில் சேர்கின்றனர்.

12ஆம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளிக்கூடங்களை அரசாங்கமும் நடத்துகின்றது,தனியாரும் நடத்துகின்றனர். அரசாங்கம் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களை விடதனியார் நடத்துகின்ற பள்ளிக்கூடங்கள் தான் தரமிக்கவையாக உள்ளன.

தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணங்கள் அடிப்படையில் அமைந்தவை. கல்வித்தரத்திற்கு ஏற்ப கட்டணங்கள் அதிகமாக அமையும். அதனால் இங்கு ஓரளவுவசதியான மாணவர்கள் தான் படிக்க முடியும். அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் ஏழைமாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களில் 90 சதவிகிதம் கிறித்தவ நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் கல்வி மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் கல்வியைத் தரமாக வழங்குகின்றன. அதனால்அவர்கள் நிர்ணயிக்கும் எந்தக் கட்டணத்தையும் மக்கள் செலுத்தத் தயாராகஇருக்கின்றனர். இந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு சேர்க்கத்தயங்குவதில்லை. காரணம் முஸ்லிம்களிடம் தரமான கல்வி நிறுவனங்கள் இல்லை.

இந்தக் கிறித்தவ நிறுவனங்கள் ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய வகுப்பான LKG, UKG (KINDER GARDEN) என குழந்தைகளுக்கான இரண்டு வகுப்புகளை நடத்துகின்றன.இன்னும் சில நிறுவனங்கள் Pre KG எனும் அதற்கு முந்தைய வகுப்பையும்நடத்துகின்றன.

இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நிறுவனங்களில்படிக்கும் குழந்தைகளில் துவங்கி அவர்கள் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து கல்லூரிசெல்கின்ற வரை தங்களுடைய கிறித்தவ மதக் கொள்கைகளை அவர்களிடம்புகுத்துவது தான்.

  • சிறு குழந்தைகளாக இருக்கும் போது தும்மல் ஏற்பட்டால் கூட “ஏசப்பா’ என்றுசொல்வதற்குக் கற்றுக் கொடுக்கின்றனர்.
  • காலையில் பள்ளி ஆரம்பிக்கும் போது பிரேயர் என்ற பெயரில் மண்டியிட்டுபைபிளின் அத்தியாயங்கள், வசனங்களைப் படிக்கச் செய்கின்றனர்.
  • தொழுகின்ற நேரம் வந்தால் மாணவ, மாணவியரை தொழுகைக்குஅனுமதிப்பதில்லை.
  • ஜும்ஆ தொழுகைக்கும் அனுமதி மறுக்கின்றனர்.
  • தாடி வைக்கும் மாணவர்களிடம் தாடியை மழிக்கச் சொல்லிகட்டாயப்படுத்துகின்றனர்.
  • அதிகமான மாணவர்கள் கிறித்தவ கல்விக்கூடங்களுக்கு 5 முதல் 10 கி.மீ. வரைசைக்கிளில் பயணம் செய்து செல்கின்றனர். இப்படிச் செல்லும் மாணவ,மாணவியருக்கு நோன்பு நேரங்களில் வழக்கமான பாட நேரமான காலை 9.30 மணிமுதல் 4.30 மணி வரை என்ற நேரத்தில் எந்தச் சலுகையும் காட்டுவதில்லை.இதனால் நோன்பு வைப்பதையே மாணவ, மாணவியர் தவிர்க்கும் நிலைஏற்படுகின்றது.
  • பெருநாளைக்குக் கூட சில கிறித்தவக் கல்வியகங்களில் விடுமுறைஅளிப்பதில்லை.
  • பருவமடைந்த, அல்லது பருவ வயதுக்கு நெருங்கிய மாணவிகளைக் கூடதொடை தெரியுமளவுக்கு ஆடைகளை (சீருடைகளை) அணியச் சொல்கின்றனர்.
  • அவர்களை தலையைத் திறந்து போடச் சொல்கின்றனர். புர்கா அணிவதற்குஅனுமதியில்லை. இப்படி புர்கா இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் மாணவியர்படிக்கும் கல்விக் கூடங்களில் ஆண் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவல நிலை.
  • ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் கல்விமுறை.இதனால் வழிதவறிய பாதைக்கு மாணவ, மாணவியர் செல்லும் நிலை.
  • பள்ளி ஆண்டு விழா என்ற பெயரில் சிறுவர், சிறுமியரையும் பருவ வயதுடையமாணவ, மாணவியரையும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது, நாடகங்களில்நடிக்கச் செய்வது, சினிமா பாடல்களை பாடி ஆடச் செய்வது போன்ற கலாச்சாரச்சீரழிவில் தள்ளுகின்றனர்.

தற்போது இருக்கின்ற ஒரு சில முஸ்லிம் நிறுவனங்களில் நமது பிள்ளைகளைச்சேர்க்கலாம் என்றால் அந்த நிறுவனங்கள் கிறித்தவ நிறுவனங்களை விட சற்றும்வேறுபட்டவையாக இல்லை. அங்கு நடக்கும் அத்தனை தீமைகளும் இங்கும்நடக்கின்றன. ஒரு சில வித்தியாசங்கள் என்னவென்றால் அங்கு பாடம் துவங்கும்போது பைபிளை வாசிப்பார்கள். இங்கு முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துவணங்குகின்ற யாநபி பாடலைப் படிக்கின்றனர். அத்துடன் இவர்கள் கல்விநிறுவனம் நடத்தும் நோக்கமே வணிகம் தான்.
இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தான் என்ன?

ஏகத்துவக் கொள்கையில் உள்ள நாம் தான் இந்தக் கல்வித் திட்டத்தைக் கையில்எடுக்க வேண்டும். ஆனால் இன்று தவ்ஹீதுப் பாதையில், பணியில் உள்ளஅழுத்தத்தையே நம்மால் தாங்க முடியாததால் கல்வித் துறையில் உரிய கவனம்செலுத்த முடியவில்லை. எனவே இனி வரும் எதிர் காலத்தில் இதை இலக்காகக்கொண்டு செயல்பட வேண்டும்.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் நமது சந்ததிகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும்போது மேற்கண்ட பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு இஸ்லாமியகொள்கைகளுக்குப் பாதிப்பில்லாத, பாதுகாப்புள்ள நிறுவனங்களில் சேர்க்க வேண்டும்.

முஸ்லிம் நிறுவனங்கள் என்றால் மிகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கிறித்தவநிறுவனம் எனும் போது அது ஓர் அந்நிய நிறுவனம் என்ற எண்ணம் நமதுகுழந்தைகளைக் காப்பதற்கு ஒரு சிறிய கவசமாகச் செயல்படும். முஸ்லிம்நிறுவனம் எனும் போது இந்தக் கவசம், கவனம் இருக்காது.

இணை வைப்புக் கொள்கையில் இருப்பவர்கள் முஸ்லிம் பெயர்களில் நடத்தும்கல்வி நிறுவனங்களில் நம் குழந்தைகளைச் சேர்க்கும் போது, இணை வைப்பில் நம்குழந்தைகளைத் தள்ளி விடும் அபாயம் இருக்கின்றது.

எனவே கிறித்தவ நிறுவனம் என்றாலும், முஸ்லிம் நிறுவனம் என்றாலும் ஏகத்துவக்கொள்கை, ஒழுக்கம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எந்தப் பங்கமும் வராதஅளவில் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து நமது குழந்தைச் செல்வங்களைப்பாதுகாப்போமாக!

Source : Onlinepj.com

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…