இரத்த தான பாராட்டு சான்றிதழ் – TNTJ ரியாத்
ரியாதில் உள்ள கிங் பஹத் மருத்துவ மனை மூலமாக நமது ஜமாஅத் கடந்த பல ஆண்டுகளாக இரத்த தான முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றோம். முகாம்கள் மட்டுமல்லாது அவசர தேவைக்கும் பல சந்தர்பங்களில் இரத்த தானம் செய்துள்ளதை கருத்தில் கொண்டு நமது ஜமாஅத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் மூலமாக கடந்த 12-05-2015 செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இது போன்ற சான்றிதழ் மற்றும் கேடயங்கள் பல முறை வழங்கியிருந்தாலும், இந்த முறை நமது ஜமாஅத்தை மேலும் கண்ணியப்படுத்தும் விதமாக மாநிலத் தலைமையிலிருந்து வருகை தந்துள்ள சகோ. சையத் இப்ராஹீம் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.