பெண்களுக்கு நைட் ஷிப்ட் கூடாது: -கர்நாடக சட்டசபை குழு பரிந்துரை!

(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்)

பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இனி இரவுப் பணி வழங்கக் கூடாது  என்று கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கென சட்டசபைக் குழுவின் தலைவர் என்.ஏ. ஹாரீஸ் தலைமையில் 21 உறுப்பினர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களின் பணி நிலை குறித்து கடந்த நவம்பர் மாதம் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஹாரீஸ் தலைமையிலான மாநில சட்டசபை கூட்டுக் குழு அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பெண்களை இரவுப் பணிக்கு அமர்த்தக் கூடாது; அதற்குப் பதில் ஆண்களை இரவுப் பணிகளில் அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது.

பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அக்குழுவினர் இத்தகைய பரிந்துரையை வைத்தனர்.

மத்திய அரசு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் சட்டம் 1961-இன்படி, இரவுப் பணிகளில் பெண்களை அனுமதிக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்நிலையில் மாநில அரசு இரவுப் பணிகளில் பெண்கள் ஈடுபட அனுமதி அளித்து அதற்கான கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு நீக்கியது. தற்போது இந்தக் குழுவின் அறிக்கையை ஏற்பதா இல்லையா என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் அவர்கள் சம்பாத்தியம் செய்வதைக் காட்டிலும் முக்கியமானது என்பதை அறிவுஜீவிகள் உணர மறுக்கின்றார்கள்.

பெண்கள் இரவுப் பணிகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவது கிடையாது; அதிகமான பெண்கள் தங்கள் கற்பை இழப்பதற்கு இரவுப்பணி காரணமாக அமைகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

டெல்லியிலும் போலீஸ் போட்ட கட்டுப்பாடு: கர்நாடக சட்ட சபைக்குழு பெண்கள் இரவு வேலைக்குப் போவதைத் தடுக்க வேண்டும் என்று தற்போது பரிந்துரை செய்துள்ளது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னதாக டெல்லி போலீஸும் இது போன்றதொரு உத்தரவை பிறப்பித்தது.
டெல்லியிலுள்ள குர்கான் மாவட்டத்தில் அலுவலகம் மற்றும் கடைகளில்

இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைக்கு வைக்க்க் கூடாது என்று குர்கான் மாநகர போலீஸ் துணை கமிஷனர் இதற்கு முன்னதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குர்கானில் பெண்களைக் கடத்தி பலாத்காரம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களை மோசமாகக் கிண்டல் செய்வதும், பஸ் நிறுத்தம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பெண்களை மானபங்கம் செய்ய முயல்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனால் நகரின் ஒட்டுமொத்த பெருமையும், கலாசாரமும் சீரழிவதுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலீசார் எடுக்கும்  எல்லா நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு  மிகவும் அவசியம். எனவே  போலீசார் எடுக்கும் எல்லா  நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

வணிக வளாகங்கள், பெரிய மால்கள், அலுவலகங்கள் மற்றும் ‘பப்’ போன்றவற்றில் இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலையில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறி அவர்களை வேலைக்கு அமர்த்துவதாக இருந்தால் அதற்கு அவர்களுக்கு போடப்பட்டுள்ள கண்டிசன்களாவன:

  • இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவர்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • இரவில் அவர்களை வீட்டில் கொண்டு போய் விடுவது உட்பட அனைத்து வகையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.
  • அவர்களைக் காரில் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விடுவது பற்றிய தினசரி அறிக்கை ஒன்றையும் தயாரித்து அதை  வாரம் ஒருமுறை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
  • எந்த வாகனத்தில் வீட்டிற்குச் செல்கிறார்? அந்த வாகனத்தின் டிரைவர் யார்? எப்போது அலுவலகத்தில் இருந்து புறப்படுகிறார்? எப்போது வீட்டில் இறக்கி விடப்படுகிறார்? போன்ற அனைத்து வகையான விவரங்களையும் அறிக்கையில் தெரிவித்திருக்க வேண்டும்.
  • அத்துடன் அவர் வீட்டிற்குப் புறப்படும்போது வாகனத்தில் வந்து அவர் ஏறுவதையும் கண்காணிப்பு காமிரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தக் காமிராவில் பதிவாகும் காட்சிகளை சுமார் 1 மாதமாவது பாதுகாப்பாக நிறுவனத்தினர் வைத்திருக்க வேண்டும்.
  • அதேபோல பப் மற்றும் மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் புகைப்படம் மற்றும் முகவரியையும் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தப் புகைப்பட மற்றும் முகவரிப் பட்டியலை 15 நாட்களுக்கு ஒருமுறை அந்தப் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரது கையொப்பத்தைப் பெற வேண்டும்.
  • மால் மற்றும் பப்’களில்  கண்காணிப்பு காமிராக்களைக் கட்டாயம் பொருத்த வேண்டும்.
  • இரவு நேரங்களில் செயல்படும் மால், பப் மற்றும் நிறுவனங்களில் அடிக்கடி போலீசார் சோதனையிட்டு அங்கு போதையில் இருக்கும் டிரைவர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது.
  • இந்த உத்தரவுகள் எல்லாம் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
  • இரவில் வெகு நேரம் திறந்திருக்கும் மால்கள் மற்றும் பப் கள் பற்றி போலீசாருக்கு பொதுமக்கள் ரகசிய தகவல் கொடுக்கலாம்.
  • போன், எஸ் எம் எஸ் மற்றும் இ மெயில் மூலம் இந்தப் புகார்களை யார் வேண்டுமானாலும் போலீசுக்கு கொடுக்கலாம். இவ்வாறு துணை கமிஷனர் மீனா கூறியுள்ளார்.

இப்படி இவ்வளவு  கண்டிஷன்களைப் போட்டு அப்படி பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமா?

ஆணும் பெண்ணும் தனித்திருப்பதால் தான் இந்த அவலங்கள்; எனவே ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் வகையிலான தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்ற ஒரேயொரு உத்தரவின் மூலம் இவையனைத்தையும் சரி செய்து விடலாம்.

இரவுப் பணியில் இருக்கும் பெண் டிஎஸ்பியை கான்ஸ்டபிள் கற்பழித்தார் என்றும், கான்ஸ்டபிளோடு பெண் உயர் அதிகாரி போலீஸ் ஸ்டேஷனிலேயே சரச சல்லாபம் என்றும் செய்திகள் வருவதை அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை போராளிகளும் அறியவில்லையா?

ஆண்களும் பெண்களும் இணைந்து வேலை செய்யக்கூடிய இடங்களில் தான் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் அளவுக்கதிகமாக நடந்து வருகின்றன. இதை விளங்கிக் கொண்டதால் தான், இஸ்லாம் ஆணும் பெண்ணும் ஒரு இடத்தில் தனித்திருக்கக் கூடாது. அவ்வாறு தனித்திருப்பார்களேயானால் அந்த இடத்தில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று சொல்லி, ஆணையும் பெண்ணையும் தள்ளி வைக்கின்றது.

இப்படி ஆண்களையும், பெண்களையும் தனித்தனியாக பிரித்து வைக்காமல், ஒன்றாக சேர்த்து வைப்பதால் ஏற்படும் விபரீதங்களை தற்போதுதான் ஒவ்வொருவரும் சிறிது சிறிதாக உணரத் தொடங்கியுள்ளனர்.

பகல் நேரத்தில் ஆணும் பெண்ணும் தனித்து வேலை செய்தாலே படுமோசமான நிகழ்வுகளெல்லாம் நடக்கும் இவ்வேளையில் இரவில் அவர்களை ஒன்றாக பணியமர்த்தினால் என்னவாகும் என்று சிந்திக்க வேண்டாமா?

நடிகர் சிவக்குமார் கல்லூரி இளவயது பெண்கள் மத்தியில் ஆற்றிய ஒரு உரை சமீப காலமாக வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் ஆகியவற்றில் வைரலாக பரவியது.

ஐடி கம்பெனிகளில் இரவு பணி புரிவோரின் நிலை என்ன என்பதை அவர் ஆதாரத்துடன் பேசியிருந்தார்.

அந்த ஐடி கம்பெனிகளில் உள்ள கழிவறைகளில் ஆணுறை பாக்கெட்டுகள் அளவுக்கதிகமான முறையில் வைக்கப்பட்டுள்ளதையும், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை கழிவறையில் வீசியதால் செப்டிக் டேங்க் அடைத்து பல கிலோ கணக்கில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை செப்டிக் டேங்கிலிருந்து அந்த நிறுவனம் அள்ளிய செய்தியும் ஆச்சர்யப்பட்ட வேண்டிய விஷயம் மட்டுமல்ல; அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமும் கூட.

அப்படியானால் இதுபோன்ற இரவு நேர நிறுவனங்களில் ஆணும் பெண்ணையும் சேர்த்து அமர்த்தும் போது அவைகள் காமக்களியாட்டம் ஆடும் இடமாகத்தான் மாறுகின்றனவேயல்லாமல்,  சம்பாத்தியத்தை பெற்றுத்தரும் மையங்களாக அந்த இடங்கள் இருக்காது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டதிட்டங்களை இவர்கள் பின்பற்றினால் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள் ஆதாரம்: (திர்மிதீ 1091) 

Source : Onlinepj.com

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…