இவரை உங்களுக்குத் தெரியுமா?
இவரை உங்களுக்குத் தெரியுமா?
“இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்”
என்று இவரைப் பற்றி பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார்.
யார் அவர்?
200 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் இவரை தங்களின் தலைவராக ஏற்றுள்ளார்கள். அவருக்காக தங்களின் உயிரையும் அர்பணிக்கத் துணிவார்கள்.
ஆனால் அவர்கள் அவரைப் பார்த்ததில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவருக்கு ஒரு சிலையுமில்லை. ஓவியப் படமுமில்லை. அவர் எப்படி இருப்பார் என்றே தெரியாமல் அவரை நேசிக்கிறார்கள்!
ஏன்?
எழுதப் படிக்கத் தெரியாதவர். அவர் யாரிடமும் கல்வி பயின்றதில்லை. ஆனால் அவரது ஒவ்வொரு அசைவும் சட்டமாக போற்றப்படுகிறது! அவரது ஒவ்வொரு சொல்லும் கட்டளையாக பேணப்படுகிறது!
எப்படி?
24 மணி நேரமும் இடைவிடாது அவரது பெயர் உலகில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவரது பெயர் சொல்லப்படும் போது அவருக்காக அனைவரும் பிரார்த்திக்கிறார்கள்.
வரலாற்றில் எப்போதும் அதிகமாக வைக்கப்படும் பெயர் அவருடையது!
இவ்வளவு நேசிக்கப்பட்டும் அவர் வணங்கப்படுவதில்லை!
அப்படி என்ன செய்தார்?
மனிதனின் மாண்பை உணர்த்தினார். படைப்புகள் அனைத்தை விடவும் மனிதன் உயர்ந்தவன்.
படைத்த இறைவனைத் தவிர யாருக்கும் மனிதன் தலைவணங்கக் கூடாது என்று போதித்தார்.
படைத்த இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவன் ஈடு இணையில்லாத மிகப் பெரியவன். அவனுக்கு தாய், தந்தை இல்லை! மனைவி, மக்கள் இல்லை!
இறைவன் குறைகள் ஏதும் இல்லாதவன். அவனுக்கு உணவு தேவையில்லை. உறக்கம் தேவையில்லை. ஓய்வும் தேவையில்லை!
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவர் மீது இறைவனும் இறக்கம் காட்ட மாட்டான் என்று எச்சரித்தார்.
தாகம் கொண்ட நாய்க்கு தண்ணீர் புகட்டியரும் சுவனம் செல்வார் என்று இரக்கம் கொள்ள வலியுறுத்தினார்!
“நல்ல தலைவர்கள் யார் தெரியுமா?
நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்கள் உங்களை நேசிப்பார்கள்.
அவர்கள் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள். நீங்கள் அவர்களுக்காக பிரார்த்திப்பீர்கள்”,
என்று தலைவர்களுக்கு இலக்கணம் சொல்லி வாழ்ந்தும் காட்டினர்!
அதனால் தான் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார்,
“இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்” என்று!
அவர், இறைவனின் தூதர் முஹம்மது ஆவார்! (இறைவன் அவருக்கு அருள் புரிவானாக)
வெளியீடு:-