எது பெண்ணுரிமை?: – பெண்ணுரிமை பேசுவோரிடம் சில கேள்விகள்!

எது பெண்ணுரிமை?:

–  பெண்ணுரிமை பேசுவோரிடம் சில கேள்விகள்!

பெண்கள் கண்ணியமான முறையில் தங்களது உடலின் கவர்ச்சியை அந்நிய ஆண்களிடம் மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது.  இவ்வாறு இஸ்லாம் சில்லும் வழிகாட்டுதலானது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது; பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதுபோன்ற ஆடைக்கட்டுப்பாடுகளை பெண்கள் மீது திணிப்பதை நிறுத்தங்கள் என்று பல்வேறு ரீதியில் பெண்ணுரிமை போராளிகள் புலம்பி வருகின்றனர்.
 
ஆடை கட்டுப்பாடு என்பது பெண் சுதந்திரத்தை பறிப்பதா?:
பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு என்பது அவசியம் என்று இஸ்லாம் கூறுவதை பெண்களுக்கு எதிரான சுதந்திரத்தில் தலையிடுவதாக பெண் அமைப்புகள் நினைப்பதுதான் இதுபோன்ற கண்டனங்களுக்குக் காரணம். பெண்கள் தங்களது உடலை மறைத்து ஆடைகளை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று நாம் பெண்களிடத்தில் சொல்வது அவர்களது சுதந்திரத்தை பறித்ததாக ஆகாது என்பதை அவர்கள் உணர மறுக்கின்றார்கள்.

ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒருவர் பெட்டியில் வைத்து கொண்டு செல்கின்றார்; அந்த பெட்டியை நன்றாக பூட்டுப்போட்டு போட்டி வையுங்கள்; இன்னும் அந்த பெட்டியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று நாம் சொன்னால் அதை தனக்கு எதிரான சுதந்திரத்தை பறிக்கும் செயலாக அவர் கருதுவாரா? அவ்வாறு பாதுகாப்பாக இருங்கள் என்று சொன்னவர்களுக்கு எதிராக பேசக்கூடியவரை சுதந்திரத்திற்காக பாடுபடக்கூடியவர் என்று நாம் சொல்வோமா?

அதுதான் இந்த விஷயத்திலும் நடக்கின்றது.

பணத்திற்கு பங்கம் வந்துவிடாமல் இருப்பதற்காக நாம் பணத்தை பாதுகாக்க பெட்டியில் வைத்து பூட்டுகின்றோம்; அதுபோல பெண்களின் கற்புக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்களை பாதுகாப்பான ஆடை அணியச் சொல்கின்றோம். இது எப்படி அவர்களது உரிமையை பறிப்பதாக ஆகும் என்பதை பெண்ணுரிமை பேசக்கூடியவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆபாச உடையணிந்து யாரேனும் சாலையில் சென்றால் ரோட்டில் செல்லக்கூடியவர்களது கண்கள் எல்லாம் எங்கு மேய்கின்றன என்பது பெண்ணுரிமை போராளிகளுக்குத் தெரியாமல் இல்லை.
ஆபாசமாக ஆடை அணிபவர்கள் அந்நிய ஆண்களை தவறான செயல் செய்ய தூண்டுகின்றார்கள்.

இவ்வாறு ஆபாச ஆடை அணிந்துவிட்டு, அதை பார்க்கக்கூடியவர்களின் கண்களின் தான் ஆபாசம் உள்ளது என்று போலியான வாதங்களை இந்த பெண்ணுரிமை போராளிகள் வைக்கின்றார்கள்.

ஒருவரது கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவி விடுகின்றோம்; இப்போது கண் எரிகின்றது என்று அவர் கதறுகின்றார் என வைத்துக் கொள்வோம்; கண் எரிச்சல் அடைந்து கதறுபவரைப் பார்த்து எரிச்சல் என்பது மிளகாய்ப் பொடியில் இல்லை; உனது கண்ணில் தான் உள்ளது என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான வாதமாக இருக்குமோ அதுபோலத்தான் இந்த வாதமும் அமைந்துள்ளது என்பதை பெண்ணுரிமை போராளிகள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஆபாசம் என்பது பெண்களின் ஆடைகளில் தான் உள்ளது என்பதை இந்த பெண்ணுரிமை போராளிகள் ஒப்புக்கொண்ட விஷயம் தான்.
அதனால்தான் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்தால் அந்த ஆபாச போஸ்டர்களில் தொப்புள் தெரிவது போல உள்ள பெண்களின் போட்டோக்களை இந்த போராளி(?) பெண்மணிகள் தார் பூசி அழிக்கும் வேலையை ஆங்காங்கே செய்து வருகின்றார்கள்.

இப்போது இந்த ஆபாச போஸ்டரை ஏன் நீங்கள் தார் பூசி அழிக்கின்றீர்கள் எனக்கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள்?

ஆபாசமாக ஆடை அணிந்து போஸ் கொடுப்பது தவறு; அதனால் தான் தார்ப் பூசி அதை அழிக்கின்றோம் என்று கூறுவார்கள்; அப்படியானால் இப்போது நாம் அவர்கள் வைத்த அதே சொத்தை வாதத்தை அப்படியே அவர்களுக்கு திருப்பிச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

அதாவது ஆபாசம் என்பது அந்த போஸ்டர்களில் இல்லை; பார்க்கக் கூடிய கண்களில் தான் உள்ளது; சும்மா சும்மா பெண்களை குறை சொல்வதை விட்டுவிட்டு நல்ல கண்ணோட்டத்தில் ஆபாச போஸ்டர்களை பாருங்கள் என்று சொன்னால் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
அதுபோலத்தானே இதையும் அணுக வேண்டும்.

இந்த பெண்ணுரிமை போராளிகளைப் பார்த்து சில கேள்விகளை முன் வைக்கின்றோம்:
கண்ட மாதிரி பெண்கள் ஆடை அணிந்து செல்வது தவறல்ல; அது அவர்களது சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நீங்கள் ஆபாச சினிமா பட போஸ்டர்களை தார் பூசி அழிப்பது ஏன்?

பெண்கள் தங்களது உடலை தங்கள் இஷ்டத்திற்கு திறந்து போட்டுக் கொண்டு திரிவதுதான் பெண் சுதந்திரம் என்றால், நீங்கள் சொல்லக்கூடிய அந்த ஒரிஜினல்(?) சுதந்திரத்தை அந்த ஆபாசப் படங்களில் நடித்த பெண்மணிகளுக்கு நீங்கள் வழங்கமாட்டீர்களா?

அது தவறு என்று நீங்கள் சொன்னால் அது பெண்ணுரிமை; நாங்கள் சொன்னால் அது பெண்ணடிமைத்தனமா?

பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு  உடலை திறந்து போட்டு அலைய வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்களா? அதுதான் பெண் சுதந்திரமா?

அப்படி இஷ்டத்திற்கு திறந்து போட்டுக் கொண்டு பெண்கள் அலையலாம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களது வீட்டில் உள்ள பெண்களை அப்படி அரைகுறை ஆடையோடு ஊரில் அலையவிட்டு ஊரில் உள்ள ஆண்களெல்லாம் அவர்களை ரசிப்பதற்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?

ஆபாச போஸ்டரில் இருக்கும் பெண்களுக்கே அந்த சுதந்திரத்தை(?) வழங்க மறுக்கும் நீங்கள் அந்த ஆபாச சுதந்திரத்தை(?) உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எப்படி வழங்குவீர்கள்?. அதை எதிர்க்கத்தானே செய்வீர்கள்?

மேற்கண்ட கேள்விகளுக்கு பெண்ணுரிமை போராளிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். பெண்களது அரைகுறை ஆடைகள்தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதை ஒவ்வொரு பெண்ணுரிமை போராளிகளும் உணர்ந்தே வைத்துள்ளார்கள் என்றாலும், வாயளவில் அதை மறுத்து வருகின்றார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:59

source : onlinepj.com

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…