ரியாத் மாநகரில் TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 75வது இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன்மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராகபிராமாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்ததை கொடையாக வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனை இனைந்து நடத்திய 75வது இரத்த தான முகாம் இன்று 11-05-2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் காலை 8.00 மணிக்கு துவங்கியது. விடுமுறை நாட்களையும்பொருட்படுத்தாமல் மக்கள் சாரை சாரையாக மருத்துவமனையில் குவிந்தார்கள். மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் இரத்த தான விருப்ப படிவம் நிரப்பி வழங்கினர்.
இந்த முகாமில் 67 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் 56 பேர் இரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ்பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ், மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் திரு. இப்ராஹீம் அல் தயிலி முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனிதநேய பணியை பாராட்டி தனது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், அவர் நிர்வாகிகளிடத்தில் பேசும் போது, இதுவரைஇந்த மருத்துவமனையில் ஒரு முகாமில் இந்த அளவுக்கு இரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலத்தை தவிர வேறு எந்தஅமைப்புகளும் நடத்தியதில்லை என்று தொரிவித்தார்.
ரியாத் மண்டல இரத்த தான ஒருங்கினைப்பாளர் சகோ. முகம்மது ரியாத் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 74 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நேய பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறைசார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.
ரியாத் மண்டலத்தின் தலைவர் சகோ. ஹாஜா முகைதீன் அவர்கள் இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் போது திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் “யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதைபாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
….எல்லா புகழும் இறைவனுக்கே ….