யாருடைய இழப்புக்கு இன்னாலில்லாஹ் கூற வேண்டும்?

முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா?

துன்பம் நேரும் போது அதனால் துவண்டு விடாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தூண்டுவதற்காக

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

என்பதைக் கூறி பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

இதன் பொருள்: நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடம் செல்லக் கூடியவர்கள்.

ஒருவர் மரணித்து அதனால் நமக்குத் துன்பம் ஏற்படும் போது இவர் மட்டும் தான் போய்விட்டாரா? நாமும் தான் அல்லாஹ்விடம் செல்லப் போகிறோம் என்று நம்பி கூறும் போது அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை நமக்கு வந்து விடும்.

அழிந்து போகாத எவரும் இல்லை; எதுவும் இல்லை அந்த வகையில் இது தவிர்க்க முடியாததாகும்; இது நடக்காத ஒன்றல்ல என்று கருதும் போது பொறுமை ஏற்படும்.

மேலும் இவ்வாறு நாமும்  நாளை அழிந்து போவோம்; அல்லாஹ்விடம் திரும்பிச் சென்று மறுவாழ்க்கையை அடைய உள்ளோம் எனவே இழப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இறந்தவர் அல்லாஹ்விடம் தனது செயலுக்கான கூலியைப் பெற உள்ளார் எனும் போது அவர் விஷயமாக நாம் எந்தத் தீர்ப்பும் சொல்லத் தேவையில்லை என்ற நம்பிக்கை உறுதிப்படும் போது இயல்பாகவே பொறுமை அதிகரித்து இயல்பு நிலைக்கு வந்து விடுவோம்.

இவ்வாறு கூறுவது மனிதர்களின் இறப்புக்காக மட்டுமுரியது அல்ல. நமக்குத் துன்பத்தைத் தரும் அனைத்து இழப்புகளுக்கும் உரியதாகும்.

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!  தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.  அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 2:155, 156, 157

அச்சம் ஏற்படும் போதும், வறுமை ஏற்படும் போதும், செல்வங்களில் இழப்பு ஏற்படும் போதும், ஆடு மாடு மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இழப்பின் போதும் இப்படிக் கூற வேண்டும் என்று இவ்வசனம் வழிகாட்டுகிறது.

திடீரென விளக்கு அனைந்து அதனால் நமக்குத் துன்பம் ஏற்பட்டால் கூட இவ்வாறு கூற வேண்டும்.

இதை எல்லா இழப்புகளின் போதும் கூறக்கூடாது. எந்த இழப்பு நமக்கு துன்பத்தை தருமோ அந்த இழப்புக்காக மட்டுமே கூற வேண்டும்.

நமது ஆடு இறந்தால் இதைக் கூற வேண்டும்; ஏனெனில் இது நமக்கு இழப்பாகும். ஆனால் ஊரில் அட்டகாசம் செய்து வந்த ஒரு காட்டு மிருகம் செத்து விட்டால் அது உயிரழப்பு என்றாலும் அதில் நமக்கு எந்த துன்பமும் இல்லை என்பதால் அதற்காக இன்னா லில்லாஹி …. எனக் கூறக்கூடாது.

அது போல் முஸ்லிமல்லாத ஒருவர் இறந்து விட்டார். அவரது இழப்பினால் நமக்குத் துன்பம் ஏற்பட்டால், அவரால் அடைந்து வந்த நன்மைகளை இழந்து விட்டால் அப்போது இதைக் கூறலாம்.

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது என்று அல்லாஹ் கூறியதற்குள் இவ்வளவு கருத்தும் அடங்கியுள்ளது.

ஒருவருக்கு முஸ்லிமல்லாத தந்தை அல்லது முஸ்லிமல்லாத மகன் இருந்து அவர் இறந்து விட்டால் அந்த முஸ்லிமுக்கு துன்பத்தைத் தரும். ஏனெனில் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் மூலம் கிடைத்து வந்த நன்மைகள் இனி மேல் கிடைக்காது எனும் போது அது அந்த முஸ்லிமுக்கு துன்பமாகத் தான் அமையும்.

அது போல் சில நண்பர்கள் மூலம் ஒரு முஸ்லிம் பலவித நன்மைகளை அடைந்து வரும் போது அந்த நண்பர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அதனால் முஸ்லிம் பாதிக்கப்படுவார். இப்படி முஸ்லிமுக்கு தனது இழப்பின் மூலம் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்காக இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூறலாம்.

நமக்குத் துன்பம் ஏற்படுகிறதா என்பது தான் இதில் கவனிக்க வேண்டியதாகும்.

மேலும் மேற்கண்ட வாக்கியத்தில் இறந்தவருக்கு பாவமன்னிப்பு கேட்பது போன்ற கருத்து அமைந்திருக்கவில்லை. மாறாக இவர் போனது போல் நாமும் போவோம் என்ற நம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும் கருத்து தான் இதில் இருக்கிறது. எனவே முஸ்லிமல்லாதவர் மரணத்துக்காக இப்படி துஆ செய்யலாமா என்று கருதக் கூடாது.ஏனெனில் இது துஆ அல்ல.

அது போல் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி கொடுங்கோலனாக இருக்கிறார். அல்லது மக்களைத் தவறான கொள்கையைக் கூறி வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் மரணித்து விட்டால் இது முஸ்லிம்களுக்கு துன்பமான காரியம் அல்ல. மாறாக துன்பத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை ஆகும்.

இத்தகையவர்கள் இறந்து விட்ட செய்தியை நாம் கேள்விப்படும் போது நாம் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டியதில்லை. ஏனெனில் இதில் நமக்கு எந்தத் துன்பமும் ஏற்படவில்லை.

முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதை கொள்கையாக கொண்ட ஒரு ஆட்சியாளன், ஒரு இயக்கத்தவன், ஒரு எழுத்தாளன், பேச்சாளன் செத்து விட்டால் அதனால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எந்த இழப்பும் இல்லை, நன்மையே என்பதால் அந்த இழப்புக்காக இவ்வார்த்தையைக் கூறக் கூடாது.

நவீன காலத்திலும் அபூஜஹில்கள், ஃபிர்அவ்ன்கள் உள்ளனர். அவர்கள் செத்தால் நமக்கு நன்மையாக அமையும் என்றால் அவர்களின் மரணச் செய்திக்காக இவ்வாறு கூறக் கூடாது…

Source : http://onlinepj.com

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…

Leave a Reply