அன்றாடம் ஓத வேண்டிய அழகிய துஆக்கள்…
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! (அல் குர்ஆன் 33:41-42)
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்… (அல் குர்ஆன் 2:152)
இறைவனை நினைவு கூறவேண்டும் என்பது இறைவிசுவாசிகளுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை (துவா) செய்வதும் ஒரு வணக்க வழிபாடு என்று கூறி அதனை எல்லா சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக அனுதினமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் கற்றுதந்த துவாக்களை ஓதி பயனடைய வேண்டும் என்று ஸ்டிக்கர் வடிவில் அச்சடித்து மக்களுக்கு விநியோகம் செய்தோம்.
இதன் பலனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக தற்போது அதனை இங்கே பதிவு செய்கிறோம். இதனை பதிவிறக்கம் செய்து தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பயனடைவதுமட்டுமில்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் share செய்து மறுமையின் நற்கூலி பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.