66வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம்! சுமார் 143 லிட்டர் இரத்தம் குறுதிக்கொடை!! 23.1.15
33 வது இரத்ததான முகாம் 23.01.2015” ரியாத் மண்டலம்:
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! சுமார் 143 லிட்டருக்கு மேல் குறுதிக்கொடை!!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாகஇந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) யுடன் இணைந்து 23.01.2015 வெள்ளியன்று மாபெரும் 33 வது இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் கிட்டத்தட்ட 360 சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். சரியாக காலை 8.00 மணிக்கு துவங்கிய முகாமில் பெண்கள் உட்பட 317 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, போன்ற காரணங்களினால் பல சகோதரர்களால் இரத்தம் வழங்க முடியவில்லை. மாலை 5:00 மணி வரை நடைபெற்ற முகாமில் 353 நபர்களோடு பதிவு செய்வது நிறுத்தப்பட்டு சுமார் 143 லிட்டருக்கு மேல் இரத்தம் கொடையாக பெறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!
இரத்த வங்கி கண்கானிப்பாளர் சகோதரி டாக்டர். ரிஹாம் அஸ்சுவையா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஜேம்ஸ் சிடாண்டோ ஆகியோர் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ – யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி பொறுப்பாளரும் மண்டல செயலாளருமான சகோ. சோழபுரம் ஹாஜா, தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொண்டர் அணி பொறுப்பாளர், துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர் தலைமையில், தொண்டர் அணியின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாக அமைந்தது. மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பம்பரமாக சுழன்று பணியாற்றினர். பலர் தத்தமது வாகனங்கள் மூலமாக கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வந்து வாகன பற்றாக்குறையை நிவர்த்தி செய்தனர்.
இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5-6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJ யினரின் பணியைப் பாராட்டினர். இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், சிரியா, இத்தியோபியா மற்றும் சவுதி நாட்டவர்களும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஹ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களும் இம்முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் நன்றியை தெரிவித்தார்.
இதில் KFMC மருத்துவமணை நிர்வாகம் ரியாத் TNTJ யின் மனித நேயப் பணியை கண்டு, மக்கள் குழுமம் இடத்தில் பெரிய LED TV ஒன்றை வைத்து ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள் காலை முதல் மாலைவரை ஒளிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…..