வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா?

 

வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா?

நான் வங்கியில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தேன். அதில் கிடைக்கும் வட்டி ஹராம் என்று தெரிய வந்ததும் தனியாக ஒரு அக்கவுண்ட் திறந்து அந்த வட்டியைப் போட்டு வருகின்றோம். உதவி கேட்பவர்களுக்கு அதிலிருந்து உதவி வருகின்றோம். இதனால் நன்மை கிடைக்காது என்பது தெரியும். ஆனால் இப்படிச் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

  • ஏ. ஆயிஷா, பொதக்குடி

பதில் :

பேங்க் வட்டியாக இருந்தாலும் இதர வட்டியாக இருந்தாலும் மார்க்க அடிப்படையில் வட்டி வாங்குவது மிகப் பெரும் பாவமாகும். வட்டியை வாங்கி அதைத் தர்மம் செய்து விடுவதால் வட்டி வாங்கிய குற்றத்திலிருந்து நாம் தப்பிக்க முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. – அல்குர்ஆன் 2:278,279

இந்த வசனத்தின் அடிப்படையில் வட்டியை விட்டு விட்டு அசலை மட்டும் வாங்கிக் கொள்வது தான் சிறந்ததாகும்.

Source : Onlinepj.com

Related Posts

முதல் இருப்பில் ஓத வேண்டியவை?

முதல் இருப்பில் ஓத வேண்டியவை?

தொழுகை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் வரை ஓத வேண்டுமா? ஸலவாத்தும், துஆவும் ஓத வேண்டுமா? முஹம்மத் அனஸ் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத்தும், ஸலாமும் கூற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான்….

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா? பதில்:- பொதுவாக உளூச் செய்யும் போது கடைசியாக…

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர்,…

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா? – பி.அன்வர் பாஷா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து…

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப்…

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்?

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்?

பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ…