லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்?

பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ வேண்டுமா?

– ஏ.ஆகிலா பானு, வடகால்

தக்க காரணத்திற்காக விடுபட்ட தொழுகைகளை வரிசைப்படி தான் தொழ வேண்டும்.

صحيح البخاري
596 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، جَاءَ يَوْمَ الخَنْدَقِ، بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي العَصْرَ، حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا صَلَّيْتُهَا» فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى العَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا المَغْرِبَ

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி), குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே, சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 596

உரிய நேரத்தில் அஸர் தொழுகையை தொழ முடியாத போது அஸர் தொழுகையை முதலில் நிறைவேற்றி விட்டுப் பின்னர் தான் மக்ரிப் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.

இந்த அடிப்படையில் லுஹரைத் தொழுத பிறகே அஸர் தொழவேண்டும்.

பள்ளியில் அஸர் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அந்த ஜமாஅத்திலேயே சேர்ந்து லுஹர் தொழுகையை நிறைவேற்றலாம்.

இமாமுடைய தொழுகையும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகையும் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

700 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: «أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ»

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 700, 701

முஆத் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நிறைவேற்றி விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று இமாமத் செய்துள்ளார்கள்.

முஆத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுததால் அவர்களின் கடமை நீங்கிவிட்டது. மீண்டும் அந்தத் தொழுகையைத் தொழுதிருக்க முடியாது என்பதால் முஆத் அவர்கள் மக்களுக்குத் தொழுவித்த தொழுகை அவரைப் பொருத்தவரை உபரியானதாக ஆகும். அதே சமயம் பின்பற்றித் தொழுபவர்கள் கடமையான தொழுகையை நிறைவேற்றுகின்றார்கள்.

இது போல் மற்றொரு ஹதீஸில், கடமையான தொழுகையின் ஜமாஅத்தைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது நஃபிலாகத் தொழ வேண்டும் என்று நபித் தோழருக்குக் கட்டளையிட்ட செய்தியையும் ஹதீஸ்களில் காண்கிறோம்.

இமாம் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கும் போது, பின்பற்றித் தொழுபவர் வேறொரு தொழுகையைத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை.

எனவே லுஹர் தொழுத பின்னர் தனியாக அஸர் தொழுது கொள்ள வேண்டும். அஸர் தொழுதுவிட்டு லுஹர் தொழுவதற்கு அனுமதி இல்லை.

மேல் கூறப்பட்ட அகழ்ப் போர் சம்பந்தமான ஹதீஸில், அஸர் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு நிறைவேற்றியிருப்பதால் இதை வைத்துக் கொண்டு தொழுகைகளை களா செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

Source : Onlinepj.com

Related Posts

முதல் இருப்பில் ஓத வேண்டியவை?

முதல் இருப்பில் ஓத வேண்டியவை?

தொழுகை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் வரை ஓத வேண்டுமா? ஸலவாத்தும், துஆவும் ஓத வேண்டுமா? முஹம்மத் அனஸ் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத்தும், ஸலாமும் கூற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான்….

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா? பதில்:- பொதுவாக உளூச் செய்யும் போது கடைசியாக…

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர்,…

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா? – பி.அன்வர் பாஷா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து…

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப்…

பெண் நபி ஏன் இல்லை?

பெண் நபி ஏன் இல்லை?

பெண் நபி ஏன் இல்லை? கேள்வி : ஏராளமான நபிமார்களை (ஆண்களை மட்டும்) தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். அப்படியென்றால் நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண்…