முதல் இருப்பில் ஓத வேண்டியவை?

தொழுகை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் வரை ஓத வேண்டுமா? ஸலவாத்தும், துஆவும் ஓத வேண்டுமா?

முஹம்மத் அனஸ்

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத்தும், ஸலாமும் கூற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

திருக்குர் ஆன் 33:56

இந்தக் கட்டளையை ஒவ்வொரு தொழுகையிலும் கூட நாம் நிறைவேற்ற வேண்டும்.

مسند أحمد مخرجا

17072 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنِي – فِي الصَّلَاةِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْمَرْءُ الْمُسْلِمُ صَلَّى عَلَيْهِ فِي صَلَاتِهِ – مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ الْأَنْصَارِيِّ، أَخِي بَلْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، عَنْ أَبِي مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرٍو، قَالَ: أَقْبَلَ رَجُلٌ حَتَّى جَلَسَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ عِنْدَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا السَّلَامُ عَلَيْكَ، فَقَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ إِذَا نَحْنُ صَلَّيْنَا فِي صَلَاتِنَا صَلَّى اللَّهُ عَلَيْكَ؟ قَالَ: فَصَمَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَحْبَبْنَا أَنَّ الرَّجُلَ لَمْ يَسْأَلْهُ. فَقَالَ: ” إِذَا أَنْتُمْ صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ”

அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் தொழும் போது தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது என்று ஒரு மனிதர் கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ அலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதுன் மஜீத் என்று கூறுங்கள் எனக் கூறினார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 16455

அத்தஹிய்யாத் எனும் சொற்றொடரில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு எனக் கூறி ஸலாம் கூறும் கட்டளையை நாம் நிறைவேற்றுகிறோம். அத்துடன் மேற்கண்ட ஸலவாத்தையும் கூறினால் தான் ஸலாம், ஸலவாத் இரண்டையும் கூறியவர்களாக முடியும்.

எனவே முதல் இருப்பில் அத்தஹிய்யாத்துடன் ஸலவாத்தையும் ஓத வேண்டும். கடைசி இருப்பிலும் ஓத வேண்டும்.

ஆனால் அதன் பின்னர் ஓதும் துஆக்களைக் கடைசி இருப்பில் ஓதினால் போதும்.

صحيح مسلم ـ

1354 – وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنِى الأَوْزَاعِىُّ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ أَبِى عَائِشَةَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ الآخِرِ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ ».

உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹுதை முடித்த பின் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்பு தேடட்டும். 1 – நரக வேதனை, 2 – கப்ரின் வேதனை, 3 – வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் வேதனை, 4 – தஜ்ஜாலின் சோதனை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் கடைசி தஷஹ்ஹுதை முடித்த பின் துஆ ஓத வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதால் முதல் இருப்பில் துஆ ஓதக் கூடாது. அத்தஹிய்யாத், ஸலவாத் ஆகிய இரண்டை மட்டும் தான் ஓத வேண்டும்.

Source : Onlinepj.com

Related Posts

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா? பதில்:- பொதுவாக உளூச் செய்யும் போது கடைசியாக…

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர்,…

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா? – பி.அன்வர் பாஷா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து…

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப்…

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்?

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்?

பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ…

பெண் நபி ஏன் இல்லை?

பெண் நபி ஏன் இல்லை?

பெண் நபி ஏன் இல்லை? கேள்வி : ஏராளமான நபிமார்களை (ஆண்களை மட்டும்) தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். அப்படியென்றால் நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண்…