இஸ்லாத்தை ஏற்றல் – ரியாத் மண்டம், அல்கர்ஜ் சஹானா கிளை!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தில்12/6/2017 திங்கள் கிழமை (ரமளான் மாதம்) மாற்றுக் கொள்கையில் இருந்த நம் தொப்பிள் கொடி உறவான மாற்று மதத்தைச் சார்ந்த சகோதரர் வரதராஜன் (நல்லாவூர், மயிலாடுதுறை) அவர்களுக்கு அல்கர்ஜ் சஹானா கிளையின் மூலம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று தனது பெயரை முஹம்மது என்று மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்!!!
இறைவன் அவருடைய உள்ளத்தை இன்னும் இஸ்லாத்தின் பால் விரிவடைய செய்யட்டும் இஸ்லாத்தில் இறுதிவரை உறுதியாக இருந்து முஸ்லீமாக வாழ உதவி செய்வானாக…
இதுபோல் நாம் அனைவரும் இந்த சத்தியமார்க்கத்தை எடுத்துச் சொல்லி மக்களை இந்த சத்திய கொள்கையின் பால் அழைக்கின்ற மகத்தான அழைப்பு பணியை செய்து மறுமையில் மகத்தான நன்மைகளை பெறுவோமாக…..
இதுபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் அழைப்பு பணி மற்றும் சமுதாய பணிகளில் நீங்களும் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்…