முக்கிய அறிவிப்பு: – மேலாண்மைக்குழு நிர்வாகம் மாற்றம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 11.01.2017 புதன் கிழமை அன்று சென்னையில் உள்ள மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் இவ்வமைப்பின் மேலாண்மைக்குழுத் தலைவராகிய எனது தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் ஒன்றாக மேலாண்மைக்குழுவில் சில மாற்றங்கள் செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி மேலாண்மைக்குழு புதியத் தலைவராக அப்துன் நாசர் MISC தேர்வு செய்யப்பட்டார். மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக ஷம்சுல்லுஹா ரஹ்மானி, ஹாஜா நூஹ், முஹம்மத் சாதிக் (எக்மோர்), அப்துல் கரீம் MISC ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மாநிலப் பொதுக்குழுவில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஷம்சுல்லுஹா ரஹ்மானி